யமஹா ஃபேஸர் 250 ஸ்பை படங்கள் வெளியானது..!

இந்தியா யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் யமஹா FZ25 நேக்டூ ஸ்டீரிட் ஸ்போர்ட்டிவ் பைக்கின் அடிப்படையிலான முழுதும் ஃபேரிங் செய்யப்பட்ட ஃபேஸர் 250 பைக்கின் முழு உற்பத்தி நிலை சாலை சோதனை ஓட்ட படங்களை வெளியாகியுள்ளது.

யமஹா ஃபேஸர் 250

ஃபேஸர் 250 என அழைக்கப்பட உள்ள இந்த பைக் மாடல் சமீபத்தில் விற்பனைக்கு வந்த யமஹாவின் எஃப்இசட் 25 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடலாக விளங்கும். இந்த பைக்கில் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ads

முதன்முறையாக வெளியாகியுள்ள பேஸர் 250 பைக்கின் முகப்பு தோற்ற அமைப்பில் பெரும்பாலான அமைப்பு  FZ25 பைக்கில் பெறப்பட்ட அதே அமைப்புடன் முழுவதும்அலங்கரிக்கப்பட்ட மாடலாக காட்சி தருவதுடன் முன்பக்க வைசர் சற்று பெரிதாக காட்சி தருகின்றது.

ஃபேரிங் செய்யப்பட்ட பேனல்களை தவிர அனைத்து அம்சங்களையும் முந்தைய எஃப்இசட் 25 பைக்கில் இருந்தே பெற்றுள்ளது. இந்த FZ25 பைக்கில் உள்ள பிரேக்கினை போலவே முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றிருக்கலாம்.

வருகின்ற பண்டிகை காலத்துக்கு முன்னதாக விற்பனைக்கு வரவுள்ள யமஹா பேஸர் 250 பைக்கின் எதிர்பார்க்கப்படும் விலை ரூ. 1.27 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பட உதவி – இன்ஸ்டா/malkeet2017

 

 

 

 

Comments