யமஹா ஆர்3 பைக் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

  புதிய யமஹா ஆர்3 ஸ்போர்ட்ஸ் பைக்கில் உள்ள சில முக்கிய வசதிகள் மற்றும் சிறப்புகள் போன்றவற்றை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். யமஹா ஆர்3 பைக்கின் விலை ரூ. 3.25 லட்சம் ஆகும்.

  யமஹா ஆர்3 பைக்

  யமஹா ஆர்3 ஸ்போர்ட்டிவ் பைக் யமஹாவின் ஸ்போர்ட்டிவ் தோற்றம் மற்றும் பெர்ஃபாமென்சை மீண்டும் நிரூபிக்கும் வகையில் R15 பைக்கிற்க்கு மேலாக விளங்கும்.

  1. டிசைன்

  முழுதும் அலங்கரிக்கப்பட்ட யமஹா ஆர்3 பைக்கில் மிக சிறப்பான பாடி ஸ்டிக்கரிங்குடன் ஸ்போர்ட்டிவாக விளங்குகின்றது.  பெர்ஃபாமென்ஸ் ரக தொடக்க நிலை மாடலான ஆர்3 பைக்கில் யமஹாவின் R சீரிஸ் பைக்குகளின் வடிவத்தினை தக்கவைத்துள்ளது.

  ads

  இரட்டை முகப்பு விளக்குகள் , மிக சிறப்பான பாடி ஸ்டிக்கரிங் என ஓட்டுமொத்த டிசைனில் தனக்கான அழகை வெளிப்படுத்துகின்றது.

  2.  என்ஜின்

  யமஹா R3 பைக்கில் 41.4பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 321சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 29.6என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

  3. சிறப்பம்சங்கள்

  ஃபுல் பேரிங் யமஹா ஆர்3 பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் டேக்கோமீட்டர் மற்றும் டிஜிட்டர் ஸ்பீடோமீட்டர்  உள்ளது. மேலும் கியர் இன்டிகேட்டர் , கடிகாரம் , டிரிப்மீட்டர் , எரிபொருள் அளவு போன்றவை உள்ளது.

  ஆர்3 பைக்கில் டைமன்ட் டைப் பிரேம் , முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , 7 விதமான அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட மோனோ- சாக்அப்சார்பர் பின்புறத்தில் உள்ளது.

  யமஹா ஆர்3 பைக்

  4. ஏபிஎஸ் இல்லை

  முன்புறத்தில் 298மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.  இந்தியாவில் ஏபிஎஸ் மாடல் தற்பொழுது ஆப்ஷனாலாக கூட வரவில்லை. ஆனால் வரும்காலத்தில் ஏபிஎஸ் ஆர்3 வரவுள்ளது.

  5. போட்டியாளர்கள்

  கேடிஎம் ஆர்சி390 , கவாஸாகி நின்ஜா 300 மற்றும் ஹாயாசாங் GT250R போன்ற பைக்குகளுக்கு நேரடியான போட்டி மாடலாக யமஹா ஆர்3 பைக் விளங்கும்.

  6. விலை

  இந்தோனேசியாவில் இருந்து பாகங்களை தருவித்து இந்தியாவில் ஒருங்கினைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

  யமஹா ஆர்3 பைக் விலை ரூ.3.25 லட்சம் ஆகும். ஆன்ரோடு விலை ரூ.3.50 லட்சத்தில் இருக்கும்.

  Important things about Yamaha R3 Bike 

  Comments