யமஹா சல்யூடோ டிஸ்க் பிரேக் வேரியண்ட் அறிமுகம்

யமஹா சல்யூடோ 125சிசி பைக் விற்பனைக்கு வந்த சில மாதங்களிலே டிஸ்க் பிரேக் வேரியண்ட் மேலும் கூடுதலாக 4 வண்ணங்களில் யமஹா சல்யூடோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யமஹா சல்யூடோ

8.2 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 125சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 10.1 என்எம் ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. யமஹா சல்யூடோ மைலேஜ் லிட்டருக்கு 78கிமீ ஆகும்.

யமஹா சல்யூடோ பைக் வெள்ளை

முன்பக்கதில் மட்டும் கூடுதலாக டிஸ்க் பிரேக் மட்டும் இணைத்து 4 புதிய வண்ணங்கள் மற்றும் கிராஃபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளன. அவை பச்சை , வெள்ளை , சிவப்பு மற்றும் நீலம் ஆகும்.

டிரம் பிரேக் வேரியண்டை விட விலை ரூ. 25000 கூடுதலாக உள்ளது. யமஹா சல்யூடோ போட்டியாளர்கள் ஹீரோ க்ளாமர் ,சிபி ஷைன் , டிவிஎஸ் ஃபினிக்‌ஷ் போன்றவை ஆகும்.

ads

யமஹா சல்யூடோ பைக் விலை (ex-showroom, Delhi)

யமஹா சல்யூடோ டிரம் பிரேக் விலை ரூ.52,000

யமஹா சல்யூடோ டிஸ்க் பிரேக் விலை ரூ.54,500

யமஹா சல்யூடோ பச்சை

யமஹா சல்யூடோ
Yamaha Saluto gets disc brake variant 

Comments