யமஹா Nமேக்ஸ் 155சிசி ஸ்கூட்டர் வருமா ?

பவர்ஃபுல் யமஹா என்மேக்ஸ் 155சிசி ஸ்கூட்டர் இந்தியாவிற்க்கு யமஹா புதுப்பிக்கின்றது.  Nமேக்ஸ் ஸ்கூட்டரில் ஆலாய் வீல் , டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் 2016ம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம்.

யமஹா Nமேக்ஸ் ஸ்கூட்டர்
யமஹா Nமேக்ஸ் ஸ்கூட்டர் 

இந்திய ஸ்கூட்டர் சந்தையில் மிக வலுவான அடிதளத்தினை அமைத்து வரும் யமஹா தற்பொழுது  ரே , ரே இசட் , ஆல்ஃபா மற்றும் ஃபேசினோ போன்ற ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது.

இந்த ஸ்கூட்டர்கள் அனைத்துமே மங்கையரை குறிவைத்து விற்பனைக்கு வந்தது. ஆண்களுக்கு சற்று பவர்ஃபுல்லான ஸ்கூட்டரை வடிவமைத்து வருகின்றது.

மேலும் வாசிக்க : யமஹா சல்யூடோ பைக் விவரம்

ads

என்மேக்ஸ் ஸ்கூட்டரில் 15பிஎச்பி ஆற்றலை தரவல்ல 155சிசி ஒரு சிலிண்டர் சிவிடி பெட்ரோல் என்ஜின் பயன்படுத்த உள்ளனர். இதன் முறுக்குவிசை 14என்எம் ஆகும்.

வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வரவுள்ள இந்த யமஹா என்மேக்ஸ் ஸ்கூட்டர் 2016ம் ஆண்டின் மத்தியில் சந்தைக்கு வரலாம். மேலும் யமஹா 100சிசி பைக் ஒற்றை அறிமுகம் செய்ய உள்ளதாம்.

Yamaha plan to launch NMax scooter 155cc in India

Comments