யூஎம் மோட்டார்சைக்கிள் இந்தியா வருகை

அமெரிக்காவின் யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் லோகி ஆட்டோ நிறுவனமும் இணைந்து இந்தியாவில் யூஎம்எல் என்ற பெயரில் யுஎம் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

ரெனகேட் கமான்டோ
ரெனகேட் கமான்டோ

கடந்த 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வந்த யூஎம் மோட்டார்சைக்கிள் வரும் 2016ம் ஆண்டில் நடைபெறவுள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ ஷோவில் விற்பனைக்கு வரவுள்ளது.

முதற்கட்டமாக 300சிசி என்ஜின் பொருத்தப்பட்ட ரெனகேட் கமான்டோ , ரெனகேட் ஸ்போர்ட் மற்றும் ஒரு ரெனகேட் வரிசை மாடல் என மொத்தம் மூன்று பைக்குகளை யூஎம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

உத்திரகாண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள லோகி ஆட்டோ தொழிற்சாலையில் யூஎம் மோட்டார்சைக்கிள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டிற்க்கு 1 லட்சம் பைக்குகளை தயாரிக்க முடியும்.

ads

யூஎம் ரெனகேட் வரிசை மாடல்  ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு போட்டியை ஏற்படுத்தும். இந்த பைக்குகளின் விலை ரூ.1.50 லட்சத்தில் தொடங்கலாம். மேலும் கூடுதல் சிசி என்ஜின் பைக்குகளும் வரும் காலத்தில் விற்பனைக்கு கொண்டு வர யூஎம்எல் திட்டமிட்டுள்ளது.

UM Motorcycles to be launched at 2016 Delhi Auto Expo

Comments