சூப்பர்ஸ்டார் ரஜினி கபாலி சூப்பர்கார் படங்கள் முழுவிபரம்

வருகின்ற ஜூலை 22ந் தேதி உலக  அளவில் வெளியிடப்பட உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கபாலி படத்தை கொண்டாடும் வகையில் ஏர்ஆசியா தொடங்கி சூப்பர் கார்கள் வரை ஸ்டிக்கரிங் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

kabali-lamborghini

கோலாலம்பூர் நகரில் உள்ள ரஜினி ரசிகர்களின் ஸ்டிக்கரிங் ஆர்வம் லம்போர்கினி கல்லார்டோ, ஆடி ஆர்8 மற்றும் டொயோட்டா ஹைலக்ஸ் என விரிவடைந்துள்ளது.அந்த வரிசையில் ஓசூரைச் சேர்ந்த அம்மன் கார்ஸ் சிறப்பு கபாலி எடிசன் மாடலை வெளியிட்டுள்ளது. சிறப்பான முறையில் டிசைனிங் செய்யப்பட்ட ஸ்டிக்கரிங் பெற்று விளங்கும் கபாலி எடிசன் ஸ்விஃப்ட் அட்டகாசமாக உள்ளது.

ads

டீசல் நிரப்பும் இடத்தில் ” நெருப்புடா ” ஹைலைட்டாக அமைந்துள்ள ,காரின் மேற்கூறையில் முழுநீள ரஜினிபடம் , பின்புறத்தில் மகிழ்ச்சி , வந்துட்டனு சொல்லு திரும்பி வந்துட்டனு சொல்லு, நெருப்புடா , நெருங்குடா என வசனங்களை தெறிக்க விட்டுள்ளனர்.

kabali-rajini-audi-r8-sportscar

மாருதி ஸ்விஃப்ட் காரில் 1.2லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் இஞ்ஜின் 84 PS  ஆற்றல் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்தும். 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் 75 PS ஆற்றல் மற்றும் 190 Nm டார்க் வெளிப்படுத்தும்.இரு இஞ்ஜின் ஆப்ஷனிலும் 5 வேக மெனுவல் டீசல் இஞ்ஜின் ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும்.

 

 

kabali-rajini-swift-edition-top

 

kabali-toyota-lamborghini

 

 

Comments