ராயல் என்ஃபீல்டு டெஸ்பேட்ச் ரைடர் விற்பனைக்கு வந்தது

சிறப்பு டெஸ்பேட்ச் ரைடர் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிள் ரூ.2.05 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பில் டெசர்ட் ஸ்ட்ரோம் மற்றும் ஸ்குவாட்ரான் புளூ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டு டெஸ்பேட்ச் ரைடர்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஸ்குவாட்ரான் புளூ

டெஸ்பேட்ச் ரைடர்கள் என்றால் என்ன?

உலகப்போரில் முக்கிய ரகசிய தகவல்களை பரிமாறும் வீரர்கள் மோட்டார்சைக்கிளை பயன்படுத்தி எதிரி நாட்டு ரானுவத்தின் கண்களில் சிக்காமல் தங்கள் நாட்டுக்கு ரகசிய செய்திகளை கொண்டு செல்வர். அவர்களை டெஸ்பேட்ச் ரைடர்கள் என அழைப்பர். அவர்களை நினைவுப்படுத்தும் வகையில் இந்த பதிப்பினை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த பதிப்பில் டெசர்ட் ஸ்ட்ரோம் மற்றும் ஸ்குவாட்ரான் புளூ என இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுளது. இதன் என்ஜின் மற்றும் மஃபலர் கருப்பு வண்ணத்தில் இருக்கும்.

ராயல் என்ஃபீல்டு டெஸ்பேட்ச் ரைடர்
டெசர்ட் ஸ்ட்ரோம்
ads

இந்த பைக்குகளை ராயல் என்ஃபீல்டு ஆன்லைன் விற்பனை மையத்தில் மட்டுமே வாங்க முடியும். வரும் ஜூலை 15ந் தேதி முன்பதிவு தொடங்குகின்றது.

ராயல் என்ஃபீல்டு டெஸ்பேட்ச் ரைடர் சிறப்பு பதிப்பில் 200 மோட்டார்சைக்கிள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது.

Online store : http://store.royalenfield.com/

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 டெஸ்பேட்ச் ரைடர் விலை ரூ.2.05 லட்சம் (ex-showroom Mumbai)

Royal Enfield Despatch Rider launched at Rs.2.05 lakhs

Comments