ரெனோ க்விட் காரின் உற்பத்தி நிறுத்தமா ?

பிரசத்தி பெற்ற ரெனோ க்விட் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரெனோ நிறுவனம் பராமரிப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால் உண்மையான காரணம் என்ஜின் சப்தம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

2016-renault-kwid-climber-racer

1.25 லட்சத்துக்கு மேற்பட்ட க்விட் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காத்திருப்பு காலம் முன்பே அதிகரித்துள்ள நிலையில் தற்பொழுது மே 11 முதல் க்விட் காரின் உற்பத்தி மட்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

ads

அதாவது க்விட் காரில் உள்ள 800சிசி என்ஜின் சப்தம் அதிகமாக வருவதாக கருதப்படுகின்றது எனவே சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 1500க்கு மேற்பட்ட என்ஜின்கள் ஸ்கிராப் செய்யப்பட்டுள்ளதாம்.

பராமரிப்பு பணிகள் மே 21 , 2016 முதல் மே 29, 2016 வரையிலான தேதிகளில்தான் நடைபெற உள்ளதாம் . ஆனால் டீலர்கள் மற்றும் வென்டர்கள் வாயிலாக என்ஜின் சப்தம் அதிகம் வருவதனாலே உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெனோ க்விட் கார் விற்பனைக்கு வந்த சில மாதங்களிலே அபரிதமான வளர்ச்சி அடைந்து ரெனோ நிறுவனத்தினை 4வது இடத்துக்கு முன்னேற வைத்துள்ளது. தொடக்கநிலை கார்களான ஆல்ட்டோ 800  மற்றும் இயான் போன்ற கார்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தி சந்தையை கைபற்றியுள்ளது.

தற்பொழுது ரெனோ க்விட் கார் உற்பத்தி மாதம் 10,000 என்ற உள்ள நிலையிலே 5 முதல் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் மேலும் காத்திருப்பு காலம் அதிகரிக்கும். வரவிருக்கும் டட்ஸன் ரெடிகோ காரிலும் இதே என்ஜின் பயன்படுத்த உள்ள நிலையில் ரெடிகோ காரின் வெளியீடு தள்ளிபோக வாய்ப்புள்ளது.

தகவல் உதவி ; ETAuto

Comments