ரெனோ க்விட் காருக்கு முன்பதிவு தொடங்கியது

ரெனோ க்விட் தொடக்க நிலை ஹேட்ச்பேக் காருக்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில் ரெனோ க்விட் காருக்கு டீலர்கள் வழியாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

ரெனோ க்விட் car
ரெனோ க்விட் 

ரெனோ க்விட் கார் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. க்விட காரின் தோற்றம் மினி எஸ்யூவி போல உள்ளதால் வெகுவாக இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

சிறப்பான கிரவுன்ட் கிளியரன்ஸ் முகப்பில் நேரத்தியான கிரில் , பாடி கிளாடிங் என வெளிதோற்றத்தில் மற்ற ஹேட்ச்பேக் கார்கள் பாரம்பரியத்தில் இருந்து சற்று வித்தியாசமாக விளங்குகின்றது.

ரெனால்ட் க்விட் உட்புறத்தில் 6 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் வசதி , ஆக்ஸ் , யூஎஸ்பி தொடர்பு என நவீன அம்சங்களை பெற்று விளங்குகின்றது.

ads

800சிசி பெட்ரோல் என்ஜின் பெருத்தப்பட்டிருக்கும் என்பதனால் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை தரவல்லதாக விளங்கும் . மேலும் 1.0 லிட்டர் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்க பெறலாம்.

க்விட் கார் ரூ. 3  முதல் 4 லட்சம் விலைக்குள இருக்கும் என்ற அறிவிப்பினால் நடுத்தர கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.

சேவை மையங்கள் வழியாக ரூ.20000 முதல் ரூ.50,000 வரையிலான தொகையை செலுத்தி முன்பதிவு செய்ய தொடங்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் மத்தியில் விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது.

Renault Kwid bookings begin

Comments