ரெனோ க்விட் முன்பதிவு அமோகம்

ரூ.2.56 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த ரெனோ க்விட் கார் சிறப்பான முன்பதிவு எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. ரெனோ க்விட் கார் மினி எஸ்யூவி போல விளங்குவது க்விட் காரின் சிறப்பம்சமாகும்.

ரெனோ க்விட்

தனது போட்டியாளர்களை விட சிறப்பான வசதிகளை பெற்று விளங்கும் ரெனோ க்விட் காரின் பூட்ஸ்பேஸ் 300 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.

க்விட் விற்பனைக்கு வந்த சில வாரங்களிலே 25,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது. இது ரெனோ க்விட் காருக்கு கிடைத்த மிக சிறப்பான தொடக்க வரவேற்பு ஆகும். அடுத்த வாரம் முதல் டெலிவரி தொடங்க பட உள்ளது.

ரெனோ க்விட் சிறப்பான தொடக்கத்தை தந்துள்ளது. பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிறப்பான முன்பதிவினை தந்துள்ளனர். இந்தியர்கள் ரெனோ பிராண்ட் மீது உள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது என ரெனோ தலைமை செயல் அதிகாரி சுமீத் தெரிவித்துள்ளார்.

ads

மேலும் படிக்க ; ரெனோ க்விட் காரின் முழுவிபரம்

மாருதி ஆல்டோ 800 மற்றும் இயான் போன்ற கார்களுக்கு சவாலாக ரெனோ க்விட் விளங்கும்.

Comments