ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் பதிப்பு விற்பனைக்கு வந்தது

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரின் டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டு விதமான வேரியண்டில் ரெனால்ட் டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர்  எடிசன் கிடைக்கும்.

ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர்

டஸ்ட்டர் சிறப்பு பதிப்பில் தோற்றத்தில் மாற்றங்கள் மற்றும் சில கூடுதல் அம்சங்களை பெற்றுள்ளது. என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

வெளி தோற்றத்தில் முன்பக்க பம்பரில் புல்பார் பம்பர் கூடுதலான விளக்குகள் போன்றவற்றை பெற்றுள்ளது, மேலும் பக்கவாட்டில் ரேசிங் ஸ்டிக்கரிங் , வாகனத்தின் நடுமத்தியிலும் பிளாக் ஸ்டிக்கரிங் போன்றவை பெற்றுள்ளது.

டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் பதிப்பில் உட்புறத்தில் இரட்டை வண்ணம் , ஃபேபரிக் இருக்கை , டோர்கார்டு , டேஸ்போர்டு , இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் போன்றவற்றில் குரோம் பூச்சூ பூசப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீலில் லெதரால் சுற்றப்பட்ட ஆரஞ்ச் வண்ண ஸ்டீச்சிங் செய்யப்பட்டுள்ளது.

ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர்
ads

ஈக்கோ மோட் , கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் , க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஸ்பீடு லிமிட்டர் போன்றவை ரெனால்ட் டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் பதிப்பில் பெற்றுள்ளது.

1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட டஸ்ட்டர் மாடலில் இரண்டு விதமான 83.8பிஎச்பி மற்றும் 105.8 பிஎச்பி என இரண்டு விதமான ஆற்றல் ஆப்ஷனிலும் டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் கிடைக்கும்.

ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் விலை விபரம் (ஆன்ரோடு சென்னை)

ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் 85PS RxL : ரூ. 11.43 லட்சம்

ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் 110PS RxL : ரூ . 13.25 லட்சம்

Renault Duster Explore Limited Edition Launched

Comments