வைரத்தால் மின்னும் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் ஸ்பெஷல் கார் அறிமுகம்

2017 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு வந்துள்ள வைரத்துகள்களால் பெயின்ட் செய்யப்பட்ட சிறப்பு ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் டைமண்ட் ஸ்டார்டஸ்ட் என அழைக்கப்படுகின்ற இந்த காரை பிரத்யேக வாடிக்கையாளரின் விருப்பத்தின் பெயரில் ரோல்ஸ்-ராய்ஸ் வடிவமைத்துள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் எலகென்ஸ் மாடல் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக விளங்கினாலும் அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில் ரோல்ஸ்-ராஸ் குட்வுட் ஆலையின் கைதேர்ந்த பெயின்ட் கலைஞர்களை கொண்டு 1000 வைரகற்களை துகள்களாக்கி அதனை பெயின்ட் உடன் இணைந்து சிறப்பு மாடலாக கோஸ்ட் எலகென்ஸ் கார் வந்துள்ளது.

சிறிய துகள்களாக அறைக்கப்பட்டவைரங்களை கொண்டு பெயின் செய்யப்பட்டுள்ள இந்த காரின் பெயின்டிங் வேலைபாடுகளுக்கு மட்டும் 2 மாதங்கள் தேவைப்பட்டதாம். மேலும் பல்வேறு ஒளிகளில் எவ்வாறு தெரிகின்றது என்பதனை ஆய்வு செய்ய மைக்ரோஸ்கோப் கருவியுடன் இரு நாட்கள் ஆய்வு மேற்கொண்டனராம்.
இன்டிரியரிலும் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சொகுசு காரின் சாதரன மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 5.50 கோடியாகும்.  யார் அந்த வாடிக்கையாளர் எவ்வளவு விலை என்பது போன்ற எந்த விபரங்களையும் ரோல்ஸ்-ராய்ஸ் வெளியடவில்லை..

Comments