வரவிருக்கும் புதிய பைக்குகள் – அக்டோபர் 2015

இந்த மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய பைக்குகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் கானலாம். மஹிந்திரா மோஜோ பைக் இந்த மாதம் வெளிவருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா மோஜோ

மஹிந்திரா மோஜோ , பஜாஜ் அவென்ஜர் மற்றும் ஹீரோ டூயட் ஸ்கூட்டர் போன்றவை உறுதி செய்யப்பட்டிருந்தாலும் மேலும் சில மாடல்கள் இந்த மாதம் விற்பனைக்கு வரலாம்.

1. மஹிந்திரா மோஜோ

மஹிந்திரா மோஜோ டூரிங் ரக பைக் கடந்த 5 வருடங்களாக பல கட்ட சோதனைகளை கடந்து தற்பொழுது வரும் அக்டோபர் 16ந் தேதி சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மோஜோ பைக் இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் செயல்பட தொடங்கியுள்ளது.
மோஜோ பைக் எதிர்பார்க்கப்படும் ஆன்ரோடு விலை ரூ.2 லட்சத்திற்க்குள் இருக்கலாம். வருகை அக்டோபர் 16ந் தேதி ஆகும்.

2. பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 200

டீலர்களிடம் வந்துள்ள புதிய அவென்ஜர் 200 பைக்கில் புதிய 200சிசி என்ஜின் ஆப்ஷனுடன் கருப்பு வண்ணத்தில் ஸ்டீரிட் 200 பைக் வரவுள்ளது. புதிய அலாய் வீல் , எரிபொருள் கலன் போன்றவை புதிதாகவும், புதிய பாடி கிராஃபிக்ஸ் பெற்றிருக்கும்.
புதிய அவென்ஜர் ஆன்ரோடு விலை ரூ.95,000 த்திற்க்குள் இருக்கலாம். இன்னும் சில தினஙகளில் விற்பனைக்கு வருகின்றது.

பஜாஜ் அவென்ஜர்

3. ஹீரோ டூயட்

ஹீரோ டூயட் ஸ்கூட்டர் மேஸ்ட்ரோ எட்ஜ் விற்பனைக்கு வந்தபொழுது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் டூயட் ஸ்கூட்டரில் பல விதமான நவீன ஆப்ஷன்கள் உள்ளது.

ஹீரோ டூயட் அக்டோபர் 13ந் தேதிக்கு பிறகு சந்தைக்கு வர வாய்ப்புகள் உள்ளது. இதன் ஆன்ரோடு விலை ரூ.52,000 இருக்கலாம்.

ஹீரோ டூயட்
ads

4. ஹோண்டா 125சிசி பைக்

புதிய ஹோண்டா 125சிசி பைக் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வருவதற்க்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் உறுதியான தகவல் இல்லை

ஹோண்டா 125சிசி

மேலும் சுஸூகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடலின் பின்புற டிஸ்க் பிரேக் வேரியண்ட் , ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் மற்றும் புதிய ஹோண்டா சிபிஆர்250 ஆர் மற்றும் ஹோண்டா சிபிஆர்150 ஆர் போன்ற பைக்குளும் வரலாம்.

Comments