ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

ரூ.24,990 விலையில் ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளாஷ் மின்சார ஸ்கூட்டரை இயக்குவதற்கு பதிவு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை.

ஹீரோ ஃப்ளாஷ்

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃப்ளாஷ் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 65 கிமீ தொலைவு வரை பயணிக்கும் வகையிலான பேட்டரியின் திறனை வழங்குகின்றது.

ads

ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 250 வாட் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிளாஷ் ஸ்கூட்டரில் 48V/20AH VRLA மின்கலன் பொருத்தப்பட்டுள்ளது. மின்கலனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 முதல் 8 மணிநேரம் வரை தேவைப்படும். 87 கிலோஎடை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில்எதிர்பாராமல் விபத்து ஏற்படும் சமயங்களில் மின்சார கசிவு ஏற்படாத வகையில் பேட்டரியில் இருந்து மின் இணைப்பினை துண்டிக்கும் வகையிலான சிறப்பு நுட்பத்தினை பெற்றுள்ளது.

முதற்கட்டமாக 2000 அலகுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள ஃபிளாஷ் ஸ்கூட்டர்கள் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ரூ.14,000 வரை அரசு மானியமாக வழங்குகின்றது. இதனை அறிவியல் துறை மற்றும் மின்சார வாகனங்கள் உற்பத்தியாளர்கள்  சங்கம் (SMEV) சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சலுகைகளுக்கு பின்னர் ஃபிளாஷ் ஸ்கூட்டரின் தமிழ்நாடு விலை ரூ.24,990  ஆகும்.

நாடுமுழுவதும் 350க்கு மேற்பட்ட டீலர்களை கொண்டு ஹீரோ எலக்ட்ரிக் செயல்பட்டு வருகின்றது.

Comments