ஹீரோ எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு வந்தது

ஹீரோ மோட்டோகார்ப்  எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக்கினை ரூ.71,515 விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பிரிமியம் மோட்டார்சைக்கிள் ஹீரோ நிறுவனத்தை வலுப்படுத்த உதவும்.

ஹீரோ எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக்
ஹீரோ எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக் ஆரஞ்சு

எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக் கடந்த 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக்கில் 150சிசி என்ஜின் பொருத்தியுள்ளனர்.

15.6 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 149.2சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது . இதன் முறுக்குவிசை 13.5என்எம் ஆகும். மிக நேர்த்தியான பாடி கிராஃபிக்ஸ் ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் விளங்குகின்றது

புதிய முகப்பு விளக்குகள் , டவீன் எல்இடி பைலட் விளக்கு மற்றும் விங்கர்ஸ் உள்ளன. 5 விதமான வண்ணங்களில் எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக் கிடைக்கும். அவை கருப்பு , சிகப்பு , சில்வர் , கருப்பு நிறத்துடன் கூடிய சிவப்பு மற்றும் ஆரஞ்சு ஆகும்.

ads

அகலமான பின்புற டயர் , பக்கவாட்டு ஸ்டேண்டு இண்டிகேட்டர் , டீயூப்லெஸ் டயர் போன்ற அம்சங்கள் ஹீரோ எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக்கில் உள்ளது.

ஹீரோ எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் பைக் விலை

ரூ. 72,725 (ex-showroom Delhi)

ரூ. 73,194 (ex-showroom Mumbai)

ரூ. 71,515 (ex-showroom Chennai)

ரூ. 73902 (ex-showroom Kolkata )

ரூ. 71,729 (ex-showroom Bengaluru )

Hero MotoCorp launches new Xtreme Sports Premium Motorcycle

Comments