ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்110 ஜூலை 14 முதல்

வருகின்ற ஜூலை 14ந் தேதி ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பு இஞ்ஜின் பொருத்தப்பட்ட பைக் மாடலாக  ஐஸ்மார்ட் 110 பைக் வரவுள்ளது.

hero-splendor-ismart-110-auto-expo-2016

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கில் 9.1 PS @7500 rpm ஆற்றல் மற்றும் 9Nm @ 5500 rpm டார்க் வழங்கும் 109.15cc ஏர் கூல்டு 4 ஸ்டோர்க் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது. ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 பைக் வேகம் மணிக்கு 87 கிமீ ஆகும். இந்த பைக்கில் ஹீரோ நிறுவனத்தின் i3S (Idle Stop and Start System ) நுட்பத்தினை பயன்படுத்தி சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ads

மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஸ்கூட்டர்களில் பொருத்தப்பட்ட இஞ்ஜினை தொடர்ந்து ஹீரோமோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது என்ஜின் ஆகும்.  அதிகப்படியான எரிபொருள் சிக்கனம் மற்றும் தரம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ள இஞ்ஜின் மைலேஜ் 110சிசியில் விற்பனையில் உள்ள அனைத்து மாடல்களையும் விட அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

hero-splendor-ismart-110-features

 

டிவிஎஸ் விக்டர் 110 ,ஹோண்டா லிவோ மற்றும் யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் போன்ற மாடல்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக அமைந்திருக்கும்.

Comments