ஹூண்டாய் ஆன்லைன் முன்பதிவு ஆரம்பம்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிதாக ஆன்லைன் வழியாக ஹூண்டாய் கார்களுக்கு முன்பதிவு செய்யும் வகையிலான சேவையை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்களுக்கும் ஆன்லைன் பதிவு வசதியை ஹூண்டாய் ஏற்படுத்தியுள்ளது.

ஹூண்டாய் ஆன்லைன்

ads

இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இயான் , கிராண்ட் ஐ10 ,எலைட் ஐ20 ,எலைட் ஐ20 ஏக்டிவ் , எக்ஸென்ட், வெர்னா ,எலன்ட்ரா , க்ரெட்டா, டூஸான் மற்றும் சான்டா ஃபீ போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து மாடல்களையும் முன்பதிவு செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த இணைய தள சேவையில் ஆன்லைன் முன்பதிவு வாயிலாக முன்பதிவு தொகையை மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக செலுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

 

தென்கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் இந்திய அளவில் விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் ஹூண்டாயின் துனை நிறுவனமாக செயல்படுகின்ற கியா மோட்டார் தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க உள்ளது.

முன்பதிவு செய்ய – https://bookonline.hyundai.co.in/

Comments