ஹூண்டாய் ஐ20 , ஐ20 ஆக்டிவ் கார்களில் புதிய டாப் வேரியண்ட்

ஹூண்டாய் ஐ20 மற்றும் ஐ20 ஆக்டிவ் கார்களில் புதிய தொடுதிரை அமைப்பினை பெற்று கூடுதலான வசதிகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. ஐ20 மற்றும் ஐ20 ஆக்டிவ் என இரண்டில் புதிய டாப் வேரியண்ட் வந்துள்ளது.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்
ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் 

7.0 இஞ்ச் அகலம் கொண்ட தொடுதிரை அமைப்பினை பெற்று ஐ20 காரில் ஆஸ்டா (O) டாப் வேரியண்ட் வந்துள்ளது. அதேபோல ஐ20 ஆக்டிவ் காரில் SX டாப் வேரியண்ட் வந்துள்ளது.

7.0 இஞ்ச் அகலம் கொண்ட தொடுதிரை ஆடியோ வீடியோ நேவிகேஷன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பில் யூஎஸ்பி , ஆக்ஸ்,  பூளூடூத் தொடர்புடன் இணைந்த நேவிகேஷன் மற்றும் குரல் வழி கட்டுப்பாடு உள்ளது. மேலும் மிக அகலமான திரையில் ரியர் வியூ கேமரா படம் காட்சியளிக்கும்.

ஹூண்டாய் ஐ20

என்ஜின் மற்றும் தோற்றம் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.

ads

விலை விபரம் (ex-showroom, Delhi)

ஹூண்டாய் ஐ20  பெட்ரோல் ஆஸ்டா (O) — ரூ. 7.17 லட்சம்
ஹூண்டாய் ஐ20  டீசல் ஆஸ்டா (O) ரூ. 8.29 லட்சம்

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் பெட்ரோல் SX ; ரூ .7.92 லட்சம்
ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் டீசல் SX ; ரூ .9.17 லட்சம்

Hyundai i20 and i20 Active gets new top variant

Comments