ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி அறிமுகம்

  புதிய ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் எஸ்யூவி இன்று தொடங்கி உள்ள இந்தோனேசியா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வந்துள்ளது. ஹோண்டா BR-V எஸ்யுவி சிறப்பான தோற்றத்தில் விளங்குகின்றது.

  ஹோண்டா பிஆர்-வி
  ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி

  புதிய ஹோண்டா பிஆர்- வி முதலாவதாக இந்தோனேசியா சந்தையில் விற்பனைக்கு வருகின்றது. அதனை தொடர்ந்து இந்தியாவில் அடுத்த வருடத்தில் விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது.

  புதிய BR-V எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் 6 வேக மெனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் வரலாம்.

  மொபிலியோ எம்பிவி காரை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய BR-V எஸ்யூவி காரின் தோற்றத்தில் பல இடங்களில் மொபிலியோவை சார்ந்துள்ளது.

  ads

  முகப்பில் மிக பளிச்சென  தோற்றமளிக்கும் வகையில் குரோம் பட்டைகளுக்கு மத்தியில் ஹோண்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது.  புராஜெக்டர் முகப்பு விளக்குகள் , எல்இடி டெயில் விளக்குகள் போன்றவை பெற்றுள்ளது.

   Honda BR-V SUV
   Honda BR-V SUV 

  உட்புறத்தில் ஹோண்டா சிட்டி மற்றும் ஜாஸ் காரின் உட்புறத்தினை தழுவியுள்ளது.  தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு மற்றும் 7 இருக்கைகளை கொண்டிருக்கும்.

  முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி , வாகனத்தின் நிலைப்புதன்மை கட்டுப்பாடு , மலை ஏற உதவும் அமைப்பு போன்ற பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

  க்ரெட்டா , டஸ்ட்டர் , ஈக்கோஸ்போர்ட்  மற்றும் வரவிருக்கும் டியூவி 300 போன்ற எஸ்யுவிகளுக்கு சவாலினை தரவல்லதாகும்.

  ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி

  Honda BR-V SUV unveiled

  Comments