ஹோண்டா CBR 650F பைக் விற்பனைக்கு வந்தது

புதிய ஹோண்டா CBR 650F ஸ்போர்ட்டிவ் பைக் ரூ. 8.10 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹோண்டா சிபிஆர் 650எஃப் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் தரவல்ல ஸ்போர்ட்டிவ் ரக பைக்காகும்.

ஹோண்டா CBR 650F பைக்
ஹோண்டா CBR 650F பைக்

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட உள்ள ஹோண்டாவின் முதல் ஸ்போர்ட்ஸ் பைக்காக ஹோண்டா CBR 650F விளங்கும். ரெவ்ஃபெஸ்ட் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

86பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திரவ மூலம் குளிர்விக்கும் 4 சிலிண்டர் கொண்ட 649சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 63என்எம் ஆகும். 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

முழுமையாக அலங்கரிக்கப்பட்ட CBR 650F பைக்கில் முன்பக்கத்தில் 320மிமீ இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 240மிமீ ஒற்றை டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது. சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தக்கூடிய இரட்டை சேனல்  ஏபிஎஸ் பிரேக் உள்ளது.

ads

ஹோண்டா CBR 650F

ஸ்போர்ட்டிவான தோற்றத்தில் விளங்கும் சிபிஆர் 650எஃப் பைக்கின் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும் பின்பக்கத்தில் 5 விதமான அட்ஜஸ்டபிள் ஆப்ஷன் கொண்ட மோனோசாக் அப்சரினை பெற்றுள்ளது.

ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் சிவப்பு – வெள்ளை வண்ணக் கலவையில் மட்டுமே கிடைக்கும்.

புதிய ஹோண்டா CBR 650F பைக் விலை ரூ.8.10 லட்சம் ( on-road Chennai )

Honda CBR 650F launched in India

Comments