ஹோண்டா CBR650F பைக் ஆகஸ்ட் 4 முதல்

இந்திய ஹோண்டா மோட்டார்சைக்கிள் CBR650F பைக்கினை வரும் ஆகஸ்ட் 4ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கின்றது. ஹோண்டா CBR650F பைக் இந்தியாவிலே அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

ஹோண்டா CBR650F பைக்
ஹோண்டா CBR650F பைக்
5 சதவீதம் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படும் ஹோண்டா CBR650F பைக் ஒரு நாளைக்கு 2 வண்டிகள் மட்டுமே ஒருங்கினைக்கப்பட உள்ளது. மேலும் முதற்கட்டமாக ஒரு வண்ணத்தில் மட்டும்  விற்பனைக்கு வரும்.
84பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த 649சிசி லிக்யூடூ கூல்டூ என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் முறுக்குவிசை 63என்எம் ஆகும். 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
ரூ.50,000 செலுத்தி ஹோண்டா சிபிஆர்650எஃப் பைக்கிற்க்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் . முதற்கட்டமாக நாட்டில் உள்ள முக்கிய 10 நகரங்களில் உள்ள முன்னனி சேவை மையங்களில் மட்டுமே கிடைக்கும்.
ஹோண்டா CBR650F பைக் போட்டியாளர்கள் டிரையம்ப் ஸ்டீரிட் டிரிப்பிள் , டுகாட்டி மான்ஸ்டர் 795 மற்றும் கவாஸாகி நின்ஜா 650 ஆகும்.
Honda CBR650F to launch in India on August 4

Comments