10 வயது சிறுவனின் குழந்தைகள் உயிர் காக்கும் கண்டுபிடிப்பு..!

அமெரிக்காவில் வெப்பம் மிகுந்த காலங்களில் கார்களில் உள்ளே வைத்து செல்லபடும் குழந்தைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் ஓசிஸ் எனும் பெயரில் குழந்தைகளின் உயிர்காக்கும் கருவியை 10 வயது சிறுவன் உருவாக்கியுள்ளான்.

குழந்தைகள் உயிர் காக்கும்

தனது பக்கத்து வீட்டில் காருக்குள் ஏற்பட்ட வெப்பத்தினால் இறந்து போன 6 மாத குழந்தையின் துயரத்தை தாங்க முடியாத டெக்சாஸ் மாகணத்தில் உள்ள மெக்கின்னே பகுதியைச் சேர்ந்த பிஷப் கறி எனும் 10 வயது சிறுவனின் அறிய உயிர் காக்கும் கண்டுபிடிப்பிற்கு Oasis என பெயரிட்டுள்ளான.

ads

அமெரிக்கா போன்ற நாடுகளில் கார்களில் குழந்தைகளை விட்டு செல்லும் பழக்கம் இருந்து வருகின்ற சூழ்நிலையில் வெப்பமான இடங்களில் நிறுத்தப்படுகின்ற கார்களில் ஏற்படும் அதிகபட்ச வெப்பத்தினால் கார்களுக்கு உள்ளே இருக்கின்ற குழந்தை மூச்சு தின்றி இறக்கின்ற சம்பவங்கள் அதிகமாகும். அமெரிக்காவில் 1998 ஆம் ஆண்டு முதல் இதுவரை 712 குழந்தைகள் கார்களுக்கு மரணித்துள்ள நிலையில் கடந்த ஆண்டு மட்டும், 24 குழந்தைகள் கார் வெப்பத்தினால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் பிஷப் கறி முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி கார்களின் உள்ளே இருக்கின்ற குழந்தைக்கு வெப்பம் அதிகரித்தால் உடனடியாக குளிர்ந்த காற்றை செலுத்தி வெப்பத்தை குறைப்பதற்கு மற்றும் குழந்தையின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு தகவலை அனுப்பும் வகையில் வடிவமைத்துள்ள இந்த கருவிக்கு ஒயாசிஸ் என பெயரிட்டுள்ளான.

தற்போது கிளே நிலையில் உள்ள இந்த மாடலுக்கு GoFundMe endhotcardeaths என்ற பெயரில் தன்னுடைய தந்தையின் உதவியுடன் $ 20,000 நிதி உதவி கோரியுள்ள இந்த சிறுவனக்கு இதுவரை $ 29.500 வரை கிடைத்துள்ளது.

பொதுவாக கார்களில் குழந்தைகளை வைத்து லாக் செய்து விட்டு செல்வதனை பெற்றோர்கள் முடிந்தவரை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.

Comments