2 வருடங்களில் 2 லட்சம் ஈக்கோஸ்போர்ட் கார்கள் – மேட் இன் இந்தியா

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யுவி காரினை 2 லட்சம் விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் 55 சதவீத கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

மிக சிறப்பான காம்பேக்ட் ரக எஸ்யூவி காராக 2013ம் ஆண்டில் சந்தையில் நுழைந்த ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் இந்தியா மட்டும்மல்லாமல் ஆப்ரிக்கா , ஆசிய பசிஃபிக் மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஈக்கோஸ்போர்ட் காரில் ஸ்பேர் வீலை நீக்கிவிட்டு ஐரோப்பா மாடலை சமீபத்தில் காட்சிக்கு வந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் இதே மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு வரலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஈக்கோஸ்போர்ட் காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன் உள்ளது. 2 வருடங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்யப்பட்டுள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் இந்தியாவில் 1,12,000 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

ads

Ford Ecosport reaches new milestone

Comments