2016 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு வந்தது

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரூ.6.79 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் கூடுதல் வசதிகள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் நகர்புறங்களில் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்கும் காம்பேக்ட் ரக எஸ்யூவி காராகும். தனது போட்டியாளர்களுடன் சமாளிக்கும் வகையில் சில கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஈக்கோஸ்போர்ட் என்ஜின் 

1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100பிஎஸ் ஆற்றலை (முந்தைய ஆற்றல் 93பிஎஸ்) வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.  இதன் மைலேஜ் லிட்டருக்கும் 22.27கிமீ ( முந்தைய மைலேஜ் 22.67கிமீ )ஆகும்.

ads

112பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் ஆகும். இதில் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் உள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 15.85கிமீ ஆகும்

125பிஎஸ் ஆற்றலை வழங்கும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 18.8கிமீ ஆகும்.

புதிய வசதிகள்

ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள் , பகல் நேர ரன்னிங் விளக்குகள் , தானியங்கி வைப்பர் போன்றவை பெற்றுள்ளது. மற்றபடி பெரிதான மாற்றங்கள் இல்லை. உட்புறத்தில் புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , பிரிமியம் லெதர் இருக்கைகள் என சில மாற்றங்களை மட்டுமே பெற்றுள்ளது.

 டைமன்ட் வெள்ளை, பாந்தர் கருப்பு, கைனெட்டிக் நீலம், மூன்டஸ்ட் சில்வர், சில் மெட்டாலிக் , ஸ்மோக் கிரே மற்றும் கோல்டன் பிரான்ஸ் (புதிது) ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

புதிய ஈக்கோஸ்போர்ட் விலை விபரம்

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்

 • ஆம்பியன்ட்: ரூ.6.79 லட்சம்
 • டிரென்ட்: ரூ.7.75 லட்சம்
 • டைட்டானியம்: ரூ.8.90 லட்சம்
 • டைட்டானியம் : ரூ.9.93 லட்சம்

1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின்

 • டிரென்ட் +: ரூ.8.53 லட்சம்
 • டைட்டானியம்+: ரூ.9.89 லட்சம்
1.5 லிட்டர் டீசல் என்ஜின்
 • ஆம்பியன்ட்: ரூ.7.98 லட்சம்
 • டிரென்ட்: ரூ.8.70 லட்சம்
 • டிரென்ட் +: ரூ.9.18 லட்சம்
 • டைட்டானியம்: ரூ.9.85 லட்சம்
 • டைட்டானியம் +: ரூ.10.44 லட்சம்

{அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம் }

2016 Ford EcoSport Launched In India

Comments