2016 மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் அறிமுகம்

  புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யுவி கார் தாய்லாந்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் இந்தியாவில் 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம்.

  2016 மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட்
  2016 மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யுவி

  புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் கம்பீரமான தோற்றத்துடன் தன் போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் வகையில் முகப்பினை பெற்றுள்ளது.

  தோற்றம்

  மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் முகப்பில் இரண்டு குரோம் பூச்சூ ஸ்லாட்களுக்கு மத்தியில் மிட்சுபிஷி லோகோ பதிக்கப்பட்டுள்ளது. அதற்க்கு கீழாக உள்ள மிக நேர்த்தியான பெரிய கருப்பு நிற கிரில் மிரட்டலாக தெரிகின்றது.

  பஜெரோ ஸ்போர்ட்
  2016 மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் டெயில்விளக்கு
  ads

  முகப்பில் ஸ்லிக் முகப்பு விளக்குகள் மற்றும் பகல் நேர எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது. பக்கவாட்டில் நேரத்தியான வளைவுகளை பெற்றுள்ளது. 18 இஞ்ச் ஆலாய் வீலை பெற்றுள்ளது.

  பின்புறத்தில் மிக சிறப்பான டெயில் விளக்கினை பின்புற பம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் புதிய அழகை பஜெரோ ஸ்போர்ட் பெற்றுள்ளது.

  உட்புறம்

  உட்புறத்தில் நவீன வசதிகளுடன் பிரிமியம் தோற்றத்தினை மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் பெற்றுள்ளது. 4 ஸ்போக்குகளை கொண்ட ஸ்டீயரிங் வீலில் பல பயன்பாடுகளுக்கான கட்டுப்பாடு ஆப்ஷனை கொண்டுள்ளது. மேலும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , பக்கவாட்டு கதவுகள் , கதவு கைப்பிடிகள் மற்றும் லெதர் அப்ஹோல்சரியை பெற்றுள்ளது.

  2016 மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட்

  புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட்

  என்ஜின்

  178பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.4 லிட்டர் MIVEC டர்போ டீசல் என்ஜினை பெற்றுள்ளது. இதன் முறுக்குவிசை 430என்எம் ஆகும். 8 வேக தானியங்கி கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக மெனுவல் என இரண்டு டிரான்ஸ்மிஷனில் கிடைக்கும்.

  2016 மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் என்ஜின்

  முந்தைய என்ஜினை விட 17 % வரை எரிபொருள் சிக்கனத்தினை தரும். சூப்பர் செலக்ட்- 4WD II ஆல் வீல் டிரைவ் அமைப்புடன் ஆஃப் ரோடு மோட் மற்றும் மலை இறங்குவதற்க்கான உதவி போன்றவை மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் காரில் முதன் முறையாக வந்துள்ளது.

  சிறப்பம்சங்கள்

  புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் காரில் 7 காற்றுப்பைகள் , முன்பக்க மோதலின் எச்சரித்து வழிகாட்டும் , பிளைன்ட் ஸ்போட் அலர்ட் , வாகனத்தை சுற்றி 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதியுள்ள கேமரா , டிராக்‌ஷன் கட்டுப்பாடு , மற்றும் ஏக்டிவ் நிலைப்பு தன்மை போன்ற வசதிகளை பெற்றிருக்கும்.

  2016 மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட்
  2016 மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட்  எஸ்யூவி

  போட்டியாளர்கள் 

  மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி காரின் போட்டியாளர்கள் , டொயோட்டா ஃபார்ச்சூனர் , ஃபோர்டு எண்டெவர்  , சான்டா ஃபீ , வரவிருக்கும் செவர்லே ட்ரெயில்பிளேசர் மற்றும் சாங்யாங் ரெக்ஸ்டான் போன்றவை ஆகும்.

  வருகை

  இந்தியாவில் 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் விற்பனைக்கு வரும் . பாகங்களை தருவித்து வடிவமைக்கப்பட உள்ளதால் மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் கார் விலை ரூ. 21 லட்சம் முதல் 27 லட்சத்திற்க்குள் இருக்கும்.

  2016 மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் ரியர்
  2016 மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் கலர்
  2016 மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட்

  2016 மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் கார் வீடியோ

        

  All-New 2016 Mitsubishi Pajero Sport SUV Revealed

  Comments