2016 ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விற்பனைக்கு வந்தது

ஹார்லி டேவிட்சன் பைக் மாடல்களின் மேம்படுத்தப்பட்ட 2016 ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. பிரிமியம் ரக சந்தையில் ஹார்லி டேவிட்சன்  முன்னிலை வகிக்கின்றது.

ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 பைக்
ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 பைக்

ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 

2016 ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 பைக் ரூ.4.52 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது. மேம்படுத்தப்பட்ட ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 பைக் பிரேக் சிஸ்டம் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.

ஸ்டீரீட் 750 பைக்கின் முந்தைய மாலில் பிரேக்கிங் சிறப்பாக இல்லை என்ற குறையினால் முன் மற்றும் பின் பிரேக்கிங் ஆப்ஷன் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் புதிய நீளம் வண்ணத்தில் வந்துள்ளது.

ஸ்டீரீட் 750 பைக்கில் 749சிசி என்ஜின் பொருத்தபட்டுள்ளது. இதன் சிறப்பான செயல்திறன் மற்றும் பணத்திற்க்கு ஏற்ற மதிப்புடன் விளங்கும் இந்த பைக் பிரிமியம் ரக சந்தையில் விற்பனையில் முதன்மையாக உள்ளது.

ஹார்லி டேவிட்சன் ஐயன் 883

ads

2016 ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பைக் ரூ.7.37 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது. மேம்படுத்தப்பட்ட ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பைக்கில் 49மிமீ ஃபோர்க்குகள் கொண்ட முன்பக்க சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் அமைப்பினை பெற்றுள்ளது.

ஐயன் 883 பைக்கில் புதிய இலகு எடை கொண்ட மேக் வீல் மற்றும் இருக்கையின் சொகுசு தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பிளாக் டேனியம் வண்ணத்தில் கிடைக்கும்.

ஹார்லி டேவிட்சன் ஐயன் 883
ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 

ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட்

2016 ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட் பைக் ரூ.9.12 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது. மேம்படுத்தப்பட்ட ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட் பைக்கில் 49மிமீ ஃபோர்க்குகள் கொண்ட முன்பக்க சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் அமைப்பினை பெற்றுள்ளது.
ஃபார்ட்டி எயிட் பைக்கில் புதிய இலகு எடை கொண்ட மேக் வீல் , வடிவத்தில் குரோம் பட்டைகளை பெற்றுள்ளது. புதிய சிவப்பு சன்குளோ வண்ணத்தில் கிடைக்கும். மேலும் புதிய பாடி கிராஃபிக்ஸ் பெற்றுள்ளது.
ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட்
ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட்

ஹார்லி டேவிட்சன் ஹெரிடேஜ் சாஃப்ட்டெயில் கிளாசிக்

2016 ஹார்லி டேவிட்சன் ஹெரிடேஜ் சாஃப்ட்டெயில் கிளாசிக் பைக் ரூ.9.12 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது.  ஹெரிடேஜ் சாஃப்ட்டெயில் கிளாசிக் பைக்கில் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் 103 ட்வீன் கேம் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் ஹெரிடேஜ் சாஃப்ட்டெயில் கிளாசிக்
ஹார்லி டேவிட்சன் ஹெரிடேஜ் சாஃப்ட்டெயில் கிளாசிக்

ஹார்லி டேவிட்சன் ரோட் கிங்

மீன்டும் ஹார்லி டேவிட்சன் ரோட் கிங் பைக் ரூ.25 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் 103 ட்வீன் கேம் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் பைக் விலை பட்டியல்

  • ஸ்டீரீட் 750 : ரூ. 4.52  லட்சம்
  • ஐயன் 883 : ரூ. 7.37 லட்சம்
  • ஃபார்ட்டி எயிட் : ரூ. 9.12 லட்சம்
  • ஹெரிடேஜ் சாஃப்ட்டெயில் கிளாசிக் : ரூ. 16.60 லட்சம்
  •   ரோட் கிங் : ரூ. 25 லட்சம்
( அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் )
ஹார்லி டேவிட்சன் ரோட் கிங்
ஹார்லி டேவிட்சன் ரோட் கிங் 

2016 Harley-Davidson line-up prices revealed

Comments