2016 ஹோண்டா ட்ரீம் நியோ விற்பனைக்கு அறிமுகம்

2016 ஆம் ஆண்டின் புதிய ஹோண்டா ட்ரீம் நியோ  பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ட்ரீம் நியோ பைக்கில் தோற்றம் மாற்றங்கள் மற்றும் வண்ணங்களில் புதிது போன்றவை மட்டுமே பெற்றுள்ளது.

honda-dream-neo-blue

லிட்டருக்கு 74 கிமீ தரவல்ல ஹெச்இடி நுட்பத்தினை கொண்டுள்ள 8.25 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 8.63 Nm ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ads

முந்தைய மாடலில் உள்ள அதே ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜினுடன் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் , புதிய பாடி கிராஃபிக்ஸ் , புதிய மூன்று வண்ணங்கள் , க்ரோம் பூச்சூ கொண்ட மஃப்லர் புராடெக்ட்ர் , முப்பரிமான ஹோண்டா லோகோ போன்றவற்றை பெற்றுள்ளது.

கருப்பு வண்ணத்தில் நீல வண்ண கோடுகள் , கிரே மெட்டாலிக் , சிவப்பு மெட்டாலிக் மற்றும் பழைய வண்ணம் கருப்பு வண்ணத்தில் சிவப்பு கோடுகள் என மொத்தம் 4 வண்ணங்களில் ட்ரீம் நியோ மாடல் வந்துள்ளது. விலையில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

2016 ஹோண்டா ட்ரீம் நியோ பைக் விலை ரூ.55722 ( ஆன்ரோடு சென்னை விலை )

ட்ரீம் நியோ பைக் படங்கள்

[envira-gallery id="7095"]

 

Comments