2017 ஆடி ஏ3 கேப்ரியோ விற்பனைக்கு வந்தது

ரூபாய் 47.98 லட்சம் விலையில் மேம்படுத்தப்பட்ட ஆடி ஏ3 கேப்ரியோ மாடல் கூடுதல் வசதிகளுடன் புதிய 1.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஆடி ஏ3 கேப்ரியோ 150 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது.

ஆடி ஏ3 கேப்ரியோ

1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 148 bhp பவரையும், 250 NM டார்க் வெளிப்படுத்தும். 7 வேக டூயல் கிளட்ச்  கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

ads

சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் நோக்கில் சிலிண்டர்களின் தேவைக்கேற்ப எரிபொருளை வழங்கும்  Cylinder on Demand (COD) அமைப்பினை பெற்று விளங்குவதனால்  A3 கேப்ரியோலே ஒரு லிட்டருக்கு 19.20 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர ரன்னிங் விளக்குகள் போன்றவற்றுடன் சாஃப்ட் டாப் எனப்படும் துணியால் ஆன கூரை திறந்து மூடும் கூரை அமைப்பு உள்ள ஏ3 மாடலில்  7 அங்குல தொடுதிரை MMI இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , சாட்டிலைட் நேவிகேஷன் , பேங் அண்ட் ஒலுஃப்சென் ஆடியோ அமைப்பு , 5 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் ,இபிடி , முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் என பல்வேறு விதமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட 2017 ஆடி ஏ3 கேப்ரியோலே விலை ரூபாய் 47.98 லட்சம்

Comments