2017 ட்ரையம்ப் ஸ்டிரீட் டிரிப்ள் டீஸர் வெளியீடு

இங்கிலாந்தின் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 2017 ட்ரையம்ப் ஸ்டிரீட் டிரிப்ள் மாடலின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 10 , 2017யில் இங்கிலாந்தில் புதிய ட்ரையம்ப் ஸ்டிரீட் டிரிப்ள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

New benchmark in power weight, handling and looks என்ற அடைமொழியுடன் வெளியிடப்பட்டுள்ள டீஸரின் வாயிலாக புதிய தோற்ற பொலிவினை பெற்ற மாடலாக வட்ட வடிவ கண்களை போன்ற இரட்டை பிரிவு முகப்பு விளக்குகளுடன் , புதிய டிஎஃப்டி (thin-film transistor –TFT ) எல்சிடி இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் பெற்றிருக்கும்.

ஸ்டிரீட் டிரிப்ள் என்ஜின்

ads

 

புதிய 800சிசி என்ஜின் பொருத்தப்பட்ட ஸ்டிரீட் டிரிப்ள் பைக்கின் பவர் 110 முதல் 125 பிஹெச்பி வரை வெளிப்படுத்தலாம். ஏபிஎஸ் பிரேக் , ரைடிங் மோட்ஸ் , டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ரைட் பை வயர் டெக்னாலஜி என பலவற்றை பெற்ற மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகின்ற ஜனவரி 10 , 2017யில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்டிரீட் டிரிப்ள் பைக் இந்தியாவில் மாரச் மாதம் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் விரைவில் இந்திய சந்தையில் ட்ரையம்ப் போனிவில் பாபர் மாடல் அடுத்த சில வாரங்களுக்கு பிறகு விற்பனைக்கு வரவுள்ளது.

Comments