2017 பஜாஜ் பல்சர் 220 பைக் விற்பனைக்கு வந்தது

மேம்படுத்தபட்ட 2017 பஜாஜ் பல்சர் 220 பைக் ரூ.93,028 விலையில்வ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பல்சர் 220F பைக்கில் பிஎஸ்4 என்ஜின் மற்றும் புதிய நீல நிறத்தை பெற்றுள்ளது.

தோற்றத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லையென்றாலும் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்று லேசர் எட்ஜ் பஜாஜ் நிறுவனத்தால் அழைக்கப்படும் பாடிகிராஃபிக்ஸ் , இன்ஸ்டுரூமென்ட் கிளஸ்ட்டரில் புதிய நிறம் மற்றும் நேர்த்தியான நீலம் வண்ணம் பெற்றுள்ளது.

2017 பஜாஜ் பல்சர் 220 என்ஜின்

ads

முந்தைய 220சிசி என்ஜின பொருத்தப்பட்டிருந்தாலும் பிஎஸ்3 என்ஜினுக்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட புதிய பிஎஸ்4 தர என்ஜின் பெற்றுள்ளது. 21.05 ஹெச்பி பவர் மற்றும் 19.12 நியூட்டன்மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

முன்பக்க டயரில் 260மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்க டயரில் 230மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் நைட்ராக்ஸ் சாக் அப்சார்பரினை பெற்று விளங்குகின்றது.

புதிய பல்சர் 220 பைக்கில் இடம்பெற்றுள்ள குறிப்பிடதக்க மாற்றங்களாக இருக்கையின் சொகுசுதன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நெடுந்தொலைவு பயணத்தில் ஏற்படும் சிரமங்களை தவிரக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 பஜாஜ் பல்சர் பைக் விலை ரூ. 93,028 ஆகும். (விலை எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) முந்தைய மாடலை விட ரூ.2300 வரை பல்சர் 220 எஃப் பைக் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நீலம் , வெள்ளை , கருப்பு மற்றும் சிவப்பு என நான்கு வண்ணங்களில் பல்சர்220 பைக் கிடைக்கும்.

மேலும் படிக்க : புதிய பஜாஜ் பல்சர் பைக்குகள் விலை பட்டியல்

2017 பஜாஜ் பல்சர் 220 படங்கள்

Comments