2017 மாருதி சுஸூகி டிசையர் ஸ்பை படம் வெளியானது

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே சோதனையில் ஈடுபட்டு வரும் 2017 மாருதி சுஸூகி டிசையர் காரின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.சமீபத்தில் வெளியான ஸ்விஃப்ட் காரின் முகப்பு தோற்றத்தையே டிசையரும் பெற்றிருக்கும்.

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரினை அடிப்படையாக கொண்ட செடான் ரக மாடலான மாருதி டிசையர் காரின் முகப்பில் மிகவும் ஸ்டைலிசான் ஹெட்லேம்ப் உடன் இணைந்த பகல் நேர எல்இடி விளக்கும் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதை உறுதி செய்யும் வகையிலான எல்இடி லைட் ஹெட்லேம்பில் அமைந்துள்ளது படத்தில் தெளிவாக தெரிகின்றது.

ads

பின்புற தோற்ற அமைப்பிலும் எல்இடி டெயில் விளக்கு அமைப்பினை பெற்றுள்ளதால் பிரேக் பிடிக்கும்பொழுது பிரேக் லைட் எல்இடி விளக்கில் அமைந்துள்ளது. நேற்று வெளியான 2017 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்காரினை போன்ற முகப்பினை பெற்றதாக பக்கவாட்டில் அமைந்திருக்கும் பின்புற கதவுகளுக்கான கைப்பிடி சி பில்லர் மேலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முழுவிபரம் – 2017 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் படம் கசிந்தது

2017 மாருதி சுஸுகி டிசையர் என்ஜின்

இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் சோதனை ஓட்டம் இந்தியாவிலும் தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக வரவுள்ள இரு கார்களிலும் வழக்கம் போல 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் அல்லது அதற்கு மாற்றாக மாருதி தயாரித்து வரும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.

image source : iab

Comments