2017 கவாஸாகி நின்ஜா 650 பைக் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் ரூ.5.69 லட்சம் விலையில் புதிய கவாஸாகி நின்ஜா 650 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  68hp பவரை வெளிப்படுத்தும் 649 சிசி என்ஜனை பெற்று விளங்குகின்றது.

கவாஸாகி நின்ஜா 650

  • ரூ.5.69 லட்சத்தில் புதிய கவாஸாகி நின்ஜா 650 பைக் விற்பனைக்கு வந்துள்ளது.
  • முந்தைய மாடலில் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய நின்ஜா 650 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் போன்றவை நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது.

நின்ஜா 650 முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடல் நின்ஜா ZX-10R பைக்கின் தோற்ற உந்துதலில் வடிவமைக்கப்பட்ட புதிய மாடலில் அதிகபட்சமாக 68hp ஆற்றலை வெளிப்படுத்தும் பிஎஸ் 4 தர 649சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 65.7 Nm டார்க்கினை வழங்கும். இதில் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனுடன் கூடிய 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

ads

இந்த பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ அப்சைட் டவுன் ஃபோர்க்குகளை பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரையும் பெற்று விளங்குகின்றது.  முன்பக்க டயரில் 300 mm டூயல் டிஸ்க் பரேக் வசதியுடன் பின்புறத்தில் 220 mm ஒற்றை டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பின்புற டயரில் பெற்றுள்ளது.

இலகு எடை மற்றும் உறுதிமிக்க டியூப்லெர் ஸ்டீல் டெர்ரில்ஸ் அடிச்சட்டத்தில் வடிவமைக்கப்பட்டடுள்ள  புதிய நின்ஜா650  பைக் முந்தைய மாடலை விட 23 கிலோ எடை குறைவானதாக 193 கிலோ எடையை பெற்று விளங்குகின்றது.

எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையில் ரூ.5.69 லட்சத்தில் நின்ஜா 650 பைக் விற்பனை செய்யப்பட உள்ளது.

 

மேலும் படிக்கலாமே..! நின்ஜா 650 பைக் மற்றும்  கவாஸாகி பைக் செய்திகள்..!

Comments