புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500  எஸ்யூவி காரினை அடிப்படையாக கொண்ட கூடுதல் வசதிகளை பெற்றுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் வரையறுக்கப்பட்ட பதிப்பு டாப் வேரியன்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ்

W10 டாப் வேரியன்டை அடிப்படையாக கொண்ட எக்ஸ்யூவி 500 ஸ்போர்ஸ் வேரியன்டில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இடம் பெற்றுள்ளது.  ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் கிடைக்க உள்ளது.

ads

ஸ்போர்ட்ஸ் வரையறுக்கப்பட்ட வேரியன்டில் பாடி  , பானெட் , ஓஆர்விஎம் போன்றவற்றில் மிக நேர்த்தியாக ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு வண்ணத்தை பெற்ற பிரேக் காலிப்பர் , ரூஃப் ரெயில்கள் , கதவு கைப்பிடிகள் , ஃபோக் விளக்கை சுற்றிய போன்ற இடங்களில் பெற்றுள்ளது. மேலும் சிறப்பு ஸ்டைலிஸ் பேட்ஜை சி பில்லரில் பெற்றுள்ளது.

140 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 330 என்எம் ஆகும். இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும்  6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்சிலும் விற்பனையில் உள்ளது.

எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் விலை (சென்னை எக்ஸ்ஷோரூம்)
XUV500 Sportz Edition MT – ரூ. 16.72 லட்சம்
XUV500 Sportz Edition AT – ரூ. 17.75 லட்சம்

மேலும் எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் காரின் 10 படங்களை படத்தின் மீது க்ளிக் பன்னுங்க..ஆட்டோமொபைல் தமிழன்

[foogallery id=”16408″]

Comments