2017 சுஸூகி ஜிக்ஸெர் SP சீரிஸ் விற்பனைக்கு வந்தது.!

சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கூடுதல் வசதிகளை பெற்றதாக 2017 சுஸூகி ஜிக்ஸெர் SP மற்றும் ஜிக்ஸெர் SF SP விற்பனைக்கு வந்துள்ளது. மூன்று நிற கலவையுடன் பாடி கிராபிக்ஸ் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

2017 சுஸூகி ஜிக்ஸெர் SP

2017 ஜிக்ஸெர் SP பேட்ஜ் பதிக்கப்பட்ட புதிய மாடல்களிலும் எஞ்சின் ஆப்ஷன் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. நேக்டூ மற்றும் ஃபேரிங் செய்யப்பட்ட இரு மாடல்களிலும் சிறப்பான செயல்திறன் மற்றும் மைலேஜ் தரவல்ல 14.8hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் சுஸூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ளதால் சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இஞ்ஜின் ஆற்றலை கடத்துவதற்கு 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

ads

முந்தைய ஆண்டின் ஸ்பெஷல் எடிசன் போலவே மிக சிறப்பான நிற கலவையை பெற்றதாக வந்துள்ள இரு மாடல்களிலும் மூன்று விதமான நிற கலவயை பெற்றதாக வந்திருப்பதுடன் ஜிக்ஸெர் பாடி ஸ்டிக்கரிங் அம்சத்தை முன் கவல் பேனல் மற்றும் பெட்ரோல் டேங்க் ஆகியவற்றில் பெற்றதாக கிடைக்கின்றது. சிறப்பு எடிசன் இரு மாடல்களிலும் ஆரஞ்சு கருப்பு நிறத்தை அடிப்படையாக வந்துள்ளது.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரினை பெற்றுள்ளது. ஜிக்ஸெர் நேக்டு பைக்கின் முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் ட்ரம் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.

ஏபிஎஸ் மற்றும் எஃப்ஐ ஆகியவற்றை பெற்ற ஃபேரிங் செய்யப்பட்ட ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடலில் கிடைக்கின்றது.

2017 சுஸூகி ஜிக்ஸெர் SP சீரிஸ் விலை பட்டியல்

2017 சுஸூகி ஜிக்ஸெர் SP – ரூ. 81,175

2017 சுஸூகி ஜிக்ஸெர் SF SP – ரூ. 99,132

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

 

Comments