2017 உலகின் சிறந்த கார் இறுதிசுற்றுக்கு செல்ல உள்ள மூன்று கார்கள் விபரம்

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் 2017-ம் ஆண்டின் உலகின் சிறந்த கார் தேர்வு செய்யப்பட உள்ள கார்களில் முதல் மூன்று கார்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறந்த கார் 2017

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் இதழ்களின் 23 நாடுகளை சேர்ந்த 75 சிறந்த ஆசிரியர்களை கொண்டு தேர்வு செய்யப்படும் இந்த கார்கள் கடந்த 6 மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

ads

வருகின்ற ஏப்ரல் 13, 2017ல் வெற்றி பெற்ற கார்களின் விபரம் நியூயார்க் ஆட்டோ ஷோ அரங்கில் வெளியிடப்பட உள்ளது. உலகின் சிறந்த கார் 2017ல் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள க்யூ5 , எஃப் பேஸ் மற்றும் டிகுவான் கார்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகின்றது.

மேலும் படிக்க –  2015 ம் ஆண்டின் உலகின் சிறந்த கார் விபரம்

உலகின் சிறந்த கார் மட்டுமல்லாமல் உலகின் சிறந்த சொகுசு கார்   , உலகின் சிறந்த பெர்ஃபாமென்ஸ் கார் , உலகின் சிறந்த சுற்றுசூழல் கார் , உலகின் சிறந்த அர்பன் கார் மற்றும் உலகின் சிறந்த டிசைன் கார் என மொத்தம் 6 பிரிவுகளில் வழங்கப்படுகின்றது.

2017 World Car of the Year:

 • ஆடி Q5
 •  ஜாகுவார் F‐Pace
 • ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

2017 World Luxury Car:

 • பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்
 • மெர்சிடிஸ் E கிளாஸ்
 • வால்வோ S90 / V90

2017 World Performance Car:

 • ஆடி R8 ஸ்பைடர்
 • மெக்லாரன் 570S
 • போர்ஷே பாக்ஸ்டர்/கேமேன்

2017 World Green Car:

 • செவர்லே போல்ட்
 • டெஸ்லா மாடல்  X
 • டொயோட்டா பிரையஸ் பிரைம்

2017 World Urban Car

 • பிஎம்டபிள்யூ i3 (94 Ah)
 • சிட்ரோன் C3
 • சுசூகி இக்னிஸ்

2017 World Car Design of the Year:

 • ஜாகுவார் F‐Pace
 • மெர்சிடஸ் பென்ஸ் S கிளாஸ் கேப்ரியோல்ட்
 • டொயோட்டா C‐HR

இந்த பட்டியலில் உங்கள் விருப்பமான கார் எது மறக்காம கமென்ட் பன்னுங்க….

Comments