லம்போர்கினி கார் விற்பனை சாதனை – 2015

2015ஆம் ஆண்டில் லம்போர்கினி கார் நிறுவனம் மீண்டும் விற்பனையில் புதியதொரு மைல்கல்லை அதாவது வாரலாற்றிலே முதன்முறையாக 3000 கார்களை கடந்து அதாவது 3245 கார்களை விற்பனை செய்துள்ளது.

lamborghini-huracan-lp580-2

50க்கு மேற்பட்ட நாடுகளில் 135 டீலர்களை கொண்டுள்ள லம்போர்கினி நிறுவனம் 2014யில் 2530 கார்கள் எண்ணிக்கையை பதிவு செய்திருந்ததை கடந்து 3245 கார்கள் உலகளவில் டெலிவரி கொடுத்து லம்போர்கினி கார் நிறுவன வராலாற்றில் முதன்முறையாக 3000 கார்கள் இலக்கை கடந்துள்ளது.  இது கடந்த ஆண்டை வினட 28 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதே விற்பனை 2010 ஆண்டுடன் ஒப்பீட்டால் 2.50 சதவீத வளர்ச்சியாகும்.

ads

இதுகுறித்து ஆட்டோமொபைல் லம்போர்கினி S.P.A நிறுவன தலைவர் மற்றும் சிஇஓ ஸ்டீபன் விங்கில்மென் கூறுகையில் 2015 ஆம் ஆண்டில் பல புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டதற்கு பலன் கிடைத்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனா என இரு சந்தைகளும் லம்போர்கினி நிறுவனத்துக்கு மாபெரும் சந்தைகளாக விளங்குகின்றன. இதனை தொடர்ந்து ஜப்பான் , இங்கிலாந்து , மத்திய கிழக்கு மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டில் லம்போர்கினி ஹூராகேன் LP610-4 கார் மிக சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கல்லார்டோ காருக்கு மாற்றாக வந்த மாடல் ஹூராகேன் ஆகும். இது கல்லார்டோவை விட 70 சதவீத வளர்ச்சியை அறிமுகம் செய்த 18 மாதங்களை ஒப்பீட்டால் ஹூராகேன் பெற்றுள்ளது. வி10 சிலிண்டர் லம்போர்கினி கார் வரலாற்றிலே முதன்முறையாக 2242 ஹூராகேன் கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன.

In 2015 Automobili Lamborghini set another sales record in its history. Lamborghini crosses 3000 cars first time company history.

Comments