4 பைக்குகளை களமிறக்கும் ஹோண்டா ரெவ்ஃபெஸ்ட்

2015 ரெவ்ஃபெஸ்ட் பதிப்பில் 4 பைக்குகளை ஹோண்டா அறிமுகம் செய்ய உள்ளது. ஹோண்டா CBR 650F CBR 150R, CBR 250R, மற்றும் CB ஹார்நெட்160R என மொத்தம் 4 பைக்குகள் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Honda RevFest

முதற்கட்டமாக ஹோண்டா CBR 650F பைக் மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் தற்பொழுது கூடுதலாக மூன்று பைக்குகளை இணைத்துள்ளது. அவை மேம்படுத்தப்பட்ட CBR 150R, CBR 250R, மற்றும் புதிய CB ஹார்நெட்160R .

நாளை ஒரேசமயத்தில் 8 முன்னனி நகரங்களில் நடைபெறவுள்ள ரெவ்ஃபெஸ்ட் பதிப்பில் இந்த நான்கு பைக்குகளும் அறிமுகம் செய்ய உள்ளனர்.

சர்வதேச அளவில் ஹார்நெட் பெயரினை பயன்படுத்தி ஹோண்டா பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது. முதன்முறையாக சிறிய என்ஜினுக்கு ஹார்நெட் 160R பைக் இந்தியா வரவுள்ளது.

ads

மேலும் வாசிக்க ; ஹோண்டா சிபிஆர் 650எஃப் விவரங்கள்

உலகின் நெ.1 மோட்டார்சைக்கிள் நிறுவனம் என்ற இடத்தினை பிடிப்பதற்க்காக ஹோண்டா நிறுவனம் தன்னுடைய முன்னாள் கூட்டாளிக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தி வருகின்றது.

Honda to launch 4 motorcycles at RevFest Aug 4th 2015

Comments