4 பைக் மாடல்களை நீக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ நிறுவனத்தின் இம்பல்ஸ் , பேசன் எக்ஸ் புரோ , இக்னைடர், மேஸ்ட்ரோ போன்ற 4 பைக் மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் நீக்க உள்ளது. இந்த 4 பைக்குகளும் ஹீரோவின் முன்னாள் கூட்டாளி ஹோண்டா நிறுவனத்தின் மாடல்களாகும்.

hero-impulse

ஹீரோ மற்றும் ஹோண்டா பிரிவுக்கு பின்னர் ஹீரோ நிறுவனம் தன்னுடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர்களை உருவாக்கி வருகின்றது. முன்முறையாக மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் ஹீரோ டூயட் என இரு ஸ்கூட்டர்களையும் தன்னுடைய சொந்த டிசைன் மற்றும் இஞ்ஜின் அடிப்படையில் உருவாக்கி வெளியிட்டது.

ads

கடந்த வாரத்தில் புதிய ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக் சிறப்பான வசதிகளுடன் ஹீரோ ஐ3எஸ் மைலேஜ் நுட்பத்துடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல புதிய வசதிகள் , டிசைன், இஞ்ஜின் போன்றவற்றை புதிதாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் நகலான மேஸ்ட்ரோ மாடலுக்கு மாற்றாக புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மற்ற மாடல்களுக்கு மாற்றாக புதிய மாடல்களை அல்லது முற்றிலும் நீக்கவும் திட்டமிட்டுள்ளது.   இம்பல்ஸ் , பேசன் எக்ஸ் புரோ , இக்னைடர், மேஸ்ட்ரோ ஆகிய 4 மாடல்களும் இந்த 2016-2017 ஆம் நிதி வருடத்தின் இறுதியில் உரிமம் நிறைவடைவதனால் இந்த முடிவினை ஹீரோ எடுத்துள்ளது.

2020 ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் 50 புதிய சந்தைகள் மற்றும் சர்வதேச அளவில் 20 உற்பத்தி ஆலைகளை ஹீரோ உருவாக்க திட்டமிட்டு வருகின்றது. பெரும்பாலும் வளர்ந்து வரும் நாடுகளை மையமாக வைத்தே ஹீரோ தன்னுடைய புதிய சந்தையை உருவாக்கி வருகின்றது.

Comments