Close Menu
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) Instagram YouTube
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) YouTube Instagram
Subscribe
Automobile Tamilan
Bajaj

பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

By MR.Durai
Facebook Twitter WhatsApp Telegram
Share
Facebook Twitter WhatsApp Telegram

பல்சர் 125 பைக்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 125 பைக்கில் ரெட்ரோ டிசைனை தக்கவைத்துக் கொண்ட என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும்  ஆன்-ரோடு விலை ரூ.1.08 லட்சத்தில் முதல் துவங்கின்ற அனைத்து வேரியண்டின் முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

2025 Bajaj Pulsar 125

பல்சர் வரிசையில் உள்ள பல்சர் என்எஸ்125, பல்சர் என்125, மற்றும் பல்சர் 125 பைக்கில் மூன்று விதமான வேரியண்ட் பெற்றுள்ள நிலையில் 2 வால்வுகளை பெற்ற புதிய 124.45cc DTS-i என்ஜின் அதிகபட்சமாக 8,500rpm-ல் 11hp பவர், 10.8 NM டார்க் ஆனது 6,500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

  • Pulsar 125 Neon Single Seat – ₹ 89,376
  • Pulsar 125 Carbon Fibre Single Seat  – ₹ 94,266
  • Pulsar 125 Carbon Fibre Split Seat – ₹ 96,269

(Ex-showroom TamilNadu)

2025 Bajaj Pulsar 125 on-Road Price in Tamil Nadu

2025 பஜாஜ் பல்சர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Pulsar 125 Neon Single Seat – ₹ 1,07,543
  • Pulsar 125 Carbon Fibre Single Seat  – ₹ 1,12,653
  • Pulsar 125 Carbon Fibre Split Seat – ₹ 1,15,986

(All Price On-road Tamil Nadu)

  • Pulsar 125 Neon Single Seat – ₹ 1,01,653
  • Pulsar 125 Carbon Fibre Single Seat  – ₹ 1,06,432
  • Pulsar 125 Carbon Fibre Split Seat – ₹ 1,09,983

(All Price on-road Pondicherry)

2025 bajaj pulsar 125 single seat blue

டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பருடன் பைக்கின் பரிமாணங்களை வீல்பேஸ் 1320 மிமீ பெற்று 165 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்று இருக்கை நீளம் 805 மிமீ ஆகவும் 11.5 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு பெற்று, 140-142 கிலோ எடை கொண்டது.

முன்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது பல்சர் NS125 பைக் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் மட்டும் வருகிறது. டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள பைக்கில் முன்புறத்தில் 80/100-17 மற்றும் பின்புறத்தில் 100/90-17 என டயர் உள்ளது.

எல்சிடி முறையிலான டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் வசதிகளுடன் முக்கியமான வசதிகளில் ஒன்றாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியும், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதியும் உள்ளது.

2025 Bajaj Pulsar 125 rivals

125சிசி சந்தையில் உள்ள பல்சர் என்எஸ்125, பல்சர் என்125, ஃபீரிடம் 125 சிஎன்ஜி போட்டியாளர்களுடன் ஹோண்டா எஸ்பி 125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், டிவிஎஸ் ரைடர் 125, ஹீரோ கிளாமர் 125, இவற்றுடன் குடும்பங்களுக்கான மாடலாக உள்ள ஹோண்டா ஷைன் 125 மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் 125 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

பஜாஜ் பல்சர் 125 நிறங்கள்

2025 ஆம் ஆண்டிற்கான பல்சர் 125யில் நியான் ஒற்றை இருக்கை வேரியண்டில் கருப்பு நிறத்துடன் கூடிய பச்சை, சிவப்பு, நீலம் மற்றும் சில்வர் உட்பட கார்பன் ஃபைபர் எடிசனில் நீளம் மற்றும் சிவப்பு என மொத்தமாக 6 நிறங்களை பெற்றுள்ளது.

2025 bajaj pulsar 125 on road price
2025 bajaj pulsar 125 split seat blue
2025 bajaj pulsar 125 split seat
2025 bajaj pulsar 125 single seat red
2025 bajaj pulsar 125 single seat blue
2025 bajaj pulsar 125 neon silver
2025 bajaj pulsar 125 neon blue
2025 bajaj pulsar 125 neon red

Faqs About Bajaj Pulsar 125

பஜாஜ் பல்சர் 125 என்ஜின் விபரம் ?

124.4cc என்ஜின் 2 வால்வு கொண்ட அதிகபட்சமாக 8,500rpm-ல் 11.8 hp பவர், 10.8 NM டார்க் ஆனது 6,500rpm-லும், 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பல்சர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை ?

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் 125 ஆன்-ரோடு விலை ரூ. 1.08 லட்சம் முதல் ரூ.1.17 லட்சம் வரை உள்ளது.

2025 பஜாஜ் பல்சர் 125 பைக்கின் மைலேஜ் விபரம் ?

பல்சர் 125 பைக்கின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 52 கிமீ வரை வழங்குகின்றது.

பல்சர் 125 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?

டிவிஎஸ் ரைடர் 125, ஹீரோ கிளாமர் 125, ஹோண்டா ஷைன் 125 மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் 125, எஸ்பி 125 மற்றும் எக்ஸ்ட்ரீம் 125ஆர்

2025 bajaj pulsar 125 on road price

பஜாஜ் பல்சர் 125 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகைஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke54mm x 54.5 mm
Displacement (cc)124.4 cc
Compression ratio–
அதிகபட்ச பவர்11.8 PS (8.82 kW) @ 8500 rpm
அதிகபட்ச டார்க்10.4 Nm @ 6,500rpm
எரிபொருள் அமைப்புFuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம்டைமன்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன்5 ஸ்பீடு
கிளட்ச்வெட் டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம்டெலிஸ்கோபிக்
பின்பக்கம்ட்வீன் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம்டிஸ்க் 240 mm
பின்புறம்டிரம் 130 mm (with CBS)
வீல் & டயர்
சக்கர வகைஅலாய்
முன்புற டயர்80/100-17 ட்யூப்லெஸ்
பின்புற டயர்100/90-17  ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி12V, 4Ah
ஸ்டார்டர் வகைஎலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம்2042 mm/2055 mm
அகலம்755 mm
உயரம்1060 mm
வீல்பேஸ்1320 mm
இருக்கை உயரம்805 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ்165 mm
எரிபொருள் கொள்ளளவு11.5 litres
எடை (Kerb)140 kg (Single) – 142 kg ( Split)

2025 Bajaj Pulsar 125 Image Gallery

பல்சர் 125 பைக்
2025 bajaj pulsar 125 on road price
2023 pulsar 125 cluster
2023 bajaj Pulsar 125 new
2025 bajaj pulsar 125 split seat blue
2025 bajaj pulsar 125 split seat
2025 bajaj pulsar 125 single seat red
2025 bajaj pulsar 125 single seat blue
2025 bajaj pulsar 125 neon silver
2025 bajaj pulsar 125 neon blue
2025 bajaj pulsar 125 neon red

125cc Bikes Bajaj Pulsar Bajaj Pulsar 125
Follow on Google News
Share. Facebook WhatsApp Twitter Telegram Pinterest
Previous Articleபுதிய நிறத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 வெளியானது
Next Article 150 கிமீ ரேஞ்சு.., ரிவோல்ட் RV பிளேஸ் X விற்பனைக்கு அறிமுகமானது.!

Related Posts

ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

சாலையில் 2 கோடி பல்சர் பைக்குகள்..! பஜாஜ் ஆட்டோ சிறப்பு சலுகைகள்.!

Auto News

ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

23,July 2025

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

19,July 2025

ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்

1,July 2025

2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

10,June 2025

சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்

28,May 2025
Facebook X (Twitter) YouTube Instagram Pinterest
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
© 2025 Automobile Tamilan.

Type above and press Enter to search. Press Esc to cancel.