ஜீப் இந்தியா சார்பாக வெளியிடப்பட்டுள்ள சிறப்பு ரேங்குலர் வில்லிஸ் 41 ஸ்பெஷல் எடிசனின் விலை ரூ.73.16 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பு 41 பச்சை என்ற நிறத்தை பெற்தாக இந்தியாவிற்கு வெறும் 30 யூனிட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூபிகான் வேரியண்டின் அடிப்படையில் ரூ.1.51 லட்சம் கூடுதலாக விலை அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், மேலும் சிறப்பு Willys ‘41 Special Edition ஆக்செரீஸ் பேக் ஆனது ரூ.4.56 லட்சத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
ரேங்குலரில் தொடர்ந்து 270 hp பவர் வெளிப்படுத்துகின்ற 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 8 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். கூடுதலாக ஆல்வேல் டிரைவ் (Jeep’s Selec-Trac full-time 4WD ) ஆப்சன் உடன் 400Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது.
1941 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு தயாரிக்கப்பட்ட வில்லிஸ் ஜீப் நினைவுப்படுத்தும் வகையில் 1941 ஸ்டிக்கரிங் ஆனது பானெட்டில் வழங்கப்பட்டு கூடுதல் ஆக்செரீஸ் என பலவற்றை கொண்டதாக அமைந்துள்ளது.
மாடலில், கூடுதல் பயன்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக, பவர் சைடு ஸ்டெப்ஸ், கிராப் ஹேண்டில்கள், தரை விரிப்புகள், 1941 ஹூட் டெக்கால் மற்றும் முன் & பின்புற டேஷ் கேம்கள் உள்ளிட்ட மேம்பாடுகள் உள்ளன. கூடுதல் ஆப்ஷனல் ஆக்செரீஸ் விரும்புவோருக்கு, சன்ரைடர் ரூஃப்டாப் மற்றும் ரூஃப் கேரியருடன் கூடிய பக்கவாட்டு ஏணி போன்ற விருப்ப சாகச மேம்படுத்தல்கள் கிடைக்கின்றன.