இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிரீமியம் சந்தையில் CB750 ஹார்னெட் மாடலை ரூ.8.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் 755cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பெற்றுள்ளது.
மிக சிறப்பான பவரை வெளிப்படுத்துகின்ற 755cc, பேரலல்-ட்வின், லிக்விட்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9,500rpm-ல் 90.52 bhp மற்றும் 7,250rpm-ல் 75Nm டார்க் வழங்குவதுடன் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்றிருக்கின்றது.
ஹார்னெட்டில் ஷோவா SFF-BP முன்புற அப்சைட் டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் இ மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்று மேட் பேர்ல் கிளேர் ஒயிட் மற்றும் மேட் பாலிஸ்டிக் பிளாக் மெட்டாலிக் என இருநிறங்களுடன் 5 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெற்றுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் 296மிமீ இரட்டை டிஸ்க்குகள் மற்றும் 240மிமீ டிஸ்க் பெற்று டூயல் சேனல் ABS பெற்றுள்ளது.
5 அங்குல கிளஸ்ட்டரில் ஹோண்டா ரோட்சின்க் ஆப் இணைப்புடன் புளூடூத் வாயிலாக இணைத்தால் நேவிகேஷன், அழைப்பு எச்சரிக்கைகள் மற்றும் மீடியா கட்டுப்பாடு, ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் (HSTC)
ஹோண்டா CB750 ஹார்னெட்டுக்கான முன்பதிவு பிக்விங் டீலர்ஷிப்களில் துவங்கப்பட்டுள்ள நிலையில் டெலிவரி ஜூன் 2025 முதல் வழங்கப்பட உள்ளது.