கேடிஎம் நிறுவனத்தின் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு 390 என்டூரோ ஆர் ஏற்கனவே இந்திய சந்தையில் கிடைக்கின்ற நிலையில் கூடுதலாக, சர்வதேச சந்தையில் கிடைக்கின்ற கூடுதல் சஸ்பென்ஷன் திறன் மற்றும் அதிகப்படியான கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்ற மாடல் விலை ரூபாய் 3,53,825 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
390 என்டூரோ ஆர் பைக்கில் தொடர்ந்து 398.7cc, ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டு எஞ்சின் 45 hp மற்றும் 39 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றிருக்கின்றது.
இந்த மாடலில் ஸ்பிலிட் ட்ரெல்லிஸ் சேஸிஸ் பெற்று 9 லிட்டர் எரிபொருள் டேங்க் மற்றும் 285 மிமீ டிஸ்க் மற்றும் 240 மிமீ டிஸ்க் பின்புறத்தில் பெறுகின்றது இரட்டை-சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. எல்இடி லைட்டிங், 4.2-இன்ச் டிஎஃப்டி கன்சோல், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், யூஎஸ்பி-சி சார்ஜர், சரிசெய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்களைக் கொண்டுள்ளது.
277மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டு 230மிமீ பயணிக்கின்ற முன்புற அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.
90/90-21 மற்றும் 140/80-18 ட்யூப் ஸ்போக் வீல் டயர் கொடுக்கப்பட்டு முன்புறத்தில் உள்ள 21 அங்குல வீல், பின்புறத்தில் 18 அங்குல வீல் கொண்டுள்ளது. முன்பாக கிடைக்கின்ற மாடலை விட ரூ.17,300 வரை கூடுதலாக அமைந்துள்ளது.