Close Menu
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) Instagram YouTube
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) YouTube Instagram
Subscribe
Automobile Tamilan
Home»Bike News
Bike News

ஹோண்டா 125சிசி பைக்குகள்., CB125 ஹார்னெட் Vs SP125 Vs ஷைன்125 ஒப்பீடு

By MR.DuraiUpdated:2,August 2025
Facebook Twitter WhatsApp Telegram
Share
Facebook Twitter WhatsApp Telegram

honda cb125 hornet vs sp125 vs shine 125

இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் 125சிசி சந்தையில் முதன்மையான தயாரிப்பாளராக உள்ள நிலையில், புதிதாக வந்துள்ள CB125 ஹார்னெட் Vs SP125 Vs ஷைன்125  என மூன்று மாடல்களின் ஒப்பீடு, முக்கிய வித்தியாசங்கள் மற்றும் விலைப் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

ஹோண்டா 125சிசி பைக்குகள் விலைப் பட்டியல்

ஷைன் 125 ஆன்-ரோடு விலை ரூ.1.06 லட்சம் முதல் ரூ.1.11 லட்சம் வரையும், எஸ்பி 125 ஆன்-ரோடு விலை ரூ.1.15 லட்சம் முதல் ரூ.1.19 லட்சம் வரையும், இறுதியாக சிபி 125 ஹார்னெட் விலை ரூ.1.34,768 ஆக உள்ளது.

Honda 125cc Price on-road Price 
Shine 125Rs 88,316-93,068Rs 1,05,567-1,10,781
SP125Rs 96,086-99,999Rs 1,14,432-1,18,879
CB125 HornetRs 1,12,000Rs 1,34,768

ஹோண்டா 125cc எஞ்சின் ஒப்பீடு

ஹோண்டாவின் மூன்று 125சிசி பைக்குகளில் உள்ள ஒரே 123.94cc எஞ்சின் மாடலுக்கு ஏற்ப பவர் மற்றும் டார்க் சிறிய அளவில் மட்டுமே மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. ஷைன் 125 பவர் 10.63hp, 11Nm  டார்க் , அடுத்து எஸ்பி 125 மாடல் பவர் 10.72hp, 10.8Nm  டார்க் மற்றும் ஸ்டீரிட் ஃபைட்டர் தோற்றத்தை பெற்ற CB125 ஹார்னெடின் பவர் 11hp, 11.2Nm  டார்க் வெளிப்படுத்துகின்றது. அதே நேரத்தில் மூன்று மாடல்களும் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

VariantPowerTorque
Shine 123.94cc10.63hp at 7,000Rpm11Nm at 6,000Rpm
SP125  123.94cc10.72hp at 7,000Rpm10.8Nm at 6,000Rpm
CB125 Hornet 123.94cc11hp at 7,000Rpm11.2Nm at 6,000Rpm

honda sp125

சஸ்பென்ஷன், பிரேக்கிங் மாற்றங்கள்

டைமண்ட் வகை சேஸிஸ் பெற்ற மூன்று பைக்குகளில் பொதுவாக 130 மிமீ டிரம் பிரேக்கினை பின்புறத்தில் பெற்றாலும் முன்புறத்தில் ஷைன் 125, எஸ்பி 125 என இரண்டும் டிஸ்க் அல்லது டிரம் என இரு ஆப்ஷனை பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் சஸ்பென்ஷனில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது.

சிபி 125 ஹார்னெடில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் பிரேக்கினை பெற்று முன்புறத்தில் கோல்டன் அப்சைடு டவுன் ஃபோர்க்கு பெற்று பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.

ஹோண்டா ஷைன் 125 பைக்

பாடி கிராபிக்ஸ் மற்றும் டிசைன் மாற்றங்கள்

சிபி 125 ஹார்னெட் மோட்டார்சைக்கிளின் தோற்றம் மிகவும் நவீனத்துவமாக ஸ்போர்ட்டிவ் நேக்டூ ஸ்டீரிட் ஃபைட்டர் போல அமைந்து கோல்டன் யூஎஸ்டி ஃபோர்க், 17 அங்குல வீலில் நிறத்துக்கு ஏற்றதாவும், ஸ்பிளிட் இருக்கை, டிஎஃப்டி கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி வசதிகள் போன்றவற்றுடன் எல்இடி விளக்குகளை ஸ்பிளிட் முறையில் அமைந்துள்ளது.

கம்யூட்டர் சந்தைக்கு ஏற்றதாக ஷைன் 125 பைக்கில் வழக்கமான பாடி கிராபிக்ஸ் உடன் மிக நேர்த்தியாக அமைந்துள்ள டேங்க் மற்றம் எல்சிடி கிளஸ்ட்டர் என மிக எளிமையான டிசைனை கொண்டுள்ளது.

எஸ்பி 125 சற்று ஸ்போர்ட்டிவான டிசைனை தக்கவைத்துக் கொண்டு டிஎஃப்டி கிளஸ்ட்டர் பெற்று கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் எல்இடி ஹெட்லைட் என பலவற்றை பெற்றதாக அமைந்துள்ளது.

honda cb125 hornet blue

125cc Bikes Honda CB 125 Hornet Honda CB Shine Honda SP125
Follow on Google News
Share. Facebook WhatsApp Twitter Telegram Pinterest
Previous Articleரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

Related Posts

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

Honda Shine 100 DX Vs Shine 100

ஹோண்டாவின் ஷைன் 100 டிஎக்ஸ் Vs ஷைன் 100 வித்தியாசங்கள் ஒப்பீடு

Facebook X (Twitter) YouTube Instagram Pinterest
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
© 2025 Automobile Tamilan.

Type above and press Enter to search. Press Esc to cancel.