Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.48.50 லட்சத்தில் டொயோட்டா கேம்ரி ஸ்பிரிண்ட் எடிசன் சிறப்புகள்

by Automobile Tamilan Team
18 August 2025, 11:37 pm
in Car News
0
ShareTweetSend

toyota camry sprint edition

கூடுதல் ஆக்செரீஸ் பெற்ற டொயோட்டா நிறுவன கேம்ரி ஸ்பிரிண்ட் எடிசனில் அடிப்படையான வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஹைபிரிட் நுட்பத்தை பெற்றதாக இந்தியாவின் பிரீமியம் செடான் சந்தையில் மிகுந்த நம்பகத்தன்மை கொண்டதாக விளங்குகின்றது.

Elegance வேரியண்டின் அடிப்படையில் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் முன் மற்றும் பின்புற பம்பர்களில் ஸ்போர்ட்டிவ் எக்ஸ்டென்ஷன், ஸ்போர்ட்டிவ் ஸ்பாயல்ர் பெற்று 18-இன்ச் அலாய் வீல்களும் கருப்பு நிறத்துடன் கேம்ரி ஸ்பிரிண்ட் பதிப்பில் உட்புறத்தில் சுற்றுப்புற விளக்குகள் மற்றும் புட்டில் விளக்குகள் உள்ளன.

கேம்ரி காரில் தொடர்ந்து 2.5 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் இரண்டு மின்சார மோட்டார் பெற்று முன்பக்க வீல் டிரைவ் மாடல் 225hp மற்றும்  220 Nm வழங்குகின்றது. இந்த செடானில் eCVT கியர்பாக்ஸ் உடன் Eco, Sport, மற்றும் Normal என மூன்று டிரைவிங் மோடுகளை கொண்டதாக வந்துள்ளது. மேலும் மைலேஜ் லிட்டருக்கு 25.49 கிமீ என சான்றிதழ் பெற்றுள்ளது.

பாதுகாப்பில் டொயோட்டா சேஃப்டி சென்ஸ் 3.0 மூலம் மோதலுக்கு முந்தைய எச்சரிக்கை, டைனமிக் ரேடார் குரூஸ் கட்டுப்பாடு, லேன் புறப்பாடு எச்சரிக்கை மற்றும் லேன் டிரேசிங் உதவி, 9 SRS ஏர்பேக்குகள், வாகன நிலைத்தன்மை கட்டுப்பாடு, இழுவை கட்டுப்பாடு, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கட்டுப்பாடு, பிரேக் ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் 360° பனோரமிக் வியூ மானிட்டர் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது.

டொயோட்டா கேம்ரி ஸ்பிரிண்ட் எடிசன் விலை ரூ.48.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த காரில் எமோஷனல் ரெட், பிளாட்டினம் பேரல் வெள்ளை, சிமென்ட் கிரே, பிரீசியஸ் மெட்டல் மற்றும் டார்க் ப்ளூ மெட்டாலிக் என 5 நிறங்கள் உள்ளது.

Related Motor News

ஆடம்பர டொயோட்டா கேம்ரி செடானின் விலை உயர்ந்தது.!

நவம்பர் 2023ல் டொயோட்டா கார் விற்பனை 51 % வளர்ச்சி

இந்தியாவில் டொயோட்டா புதிய ஆலையை துவங்க ரூ.3,300 கோடி முதலீடு

இந்தியா வரவுள்ள புதிய டொயோட்டா கேம்ரி கார் அறிமுகமானது

Toyota Camry Hybrid : 2019 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகம்

புதிய டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் அறிமுகம் விபரம்

Tags: Toyota CamryToyota Camry Hybrid
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 next-gen kia seltos suv

புதிய 2026 கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம்.!

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.!

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.!

டிசம்பர் 15ல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது.!

ஜனவரி 5ல் புதிய மஹிந்திரா XUV 7XO விற்பனைக்கு வெளியாகிறது.!

டாடா மோட்டார்சின் சியரா விலைப் பட்டியல் வெளியானது.!

நிசானின் புதிய கைட் எஸ்யூவி இந்தியா வருமா..?

543 கிமீ ரேஞ்ச்., மாருதி சுசூகியின் e Vitara எஸ்யூவி வெளியானது

பெட்ரோல் சஃபாரி, ஹாரியர் அறிமுகத்திற்கு தயாரான டாடா மோட்டார்ஸ்

புதிய 2026 செல்டோஸ் அறிமுக டீசரை வெளியிட்ட கியா

டிசம்பர் 2-ல் மாருதி சுசூகி e Vitara எலக்ட்ரிக் விற்பனைக்கு வெளியாகிறது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan