இந்தியாவின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (Q2 FY26) தனது வரலாற்றிலேயே அதிகபட்ச விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
இந்தக் காலாண்டில் மொத்தமாக 15.07 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலாண்டில் விற்ற 11.90 லட்சம் யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 22% அபார வளர்ச்சியாகும்.
இது வெறும் விற்பனை எண்ணிக்கை அல்ல; ஜிஎஸ்டி 2.0 குறைப்பு, பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பு, வலுவான ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் ஸ்கூட்டர் பிரிவில் அதன் சந்தை வலிமை ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனை முந்தைய ஆண்டில் இதே மாதம் 10,703 ஆக இருந்த விற்பனை தற்பொழுது 17,141 யூனிட்களாக பதிவு செய்து 60% அபார வளர்ச்சி அடைந்துள்ளது.
செப்டம்பர் 2025 விற்பனை
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5,41,064 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்தாண்டின் 4,82,495 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 12% வளர்ச்சி.
இருசக்கர விற்பனை: 4,71,792 யூனிட்டிலிருந்து 5,23,923 யூனிட்கள் (11% உயர்வு)
உள்நாட்டு சந்தை: 3,69,138 யூனிட்டிலிருந்து 4,13,279 யூனிட்கள் (12% வளர்ச்சி)
மோட்டார்சைக்கிள்கள்: 2,29,268 யூனிட்டிலிருந்து 2,49,621 யூனிட்கள் (9% வளர்ச்சி)
ஸ்கூட்டர்கள்: 1,86,751 யூனிட்டிலிருந்து 2,18,928 யூனிட்கள் (17% வளர்ச்சி)
மின்சார வாகனங்கள் (EVs):
- 28,901 யூனிட்டிலிருந்து 31,266 யூனிட்கள் (8% வளர்ச்சி). ஆனால், “அரிய வகை காந்தம் கிடைப்பதில்” இன்னும் சிறப்பான முறையில் கிடைக்காமல் சவாலாகள் நீடிக்கின்றன என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்றுமதி சந்தையில்
- 1,11,007 யூனிட்டிலிருந்து 1,22,108 யூனிட்கள் (10% வளர்ச்சி).
- இதில் இருசக்கர ஏற்றுமதி மட்டும் 8% வளர்ச்சி பெற்று, 1,02,654 யூனிட்களிலிருந்து 1,10,644 யூனிட்களுக்கு உயர்ந்துள்ளது.