
இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பளரான மாருதி சுசூகியின் முதல் மின்சார e Vitara எஸ்யூவி ரக மாடலை டிசம்பர் 2 அல்லது டிசம்பர் மாத முதல் வாரத்தில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. இதன் மூலம் மிக வலுவான போட்டியாளர்களை டாடா, எம்ஜி மற்றும் மஹிந்திரா உட்பட அனைத்து மின்சார வாகன தயாரிப்பாளர்களும் எதிர்கொள்ள உள்ளனர்.
மிக வலுவான போட்டியாளர்கள் சந்தையில் உள்ள நிலையில் இ விட்டாரா எஸ்யூவி 49kWh மற்றும் 61kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்று ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை சர்வதேச அளவில் பெற்றிருந்தாலும், இந்திய சந்தைக்கு முதற்கட்டமாக FWD மட்டுமே வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
FWD வேரியண்ட் 49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
கட்டுமானத்தை பொறுத்தவரை உறுதியான வடிவமைப்பினை மாருதி தனது கார்களில் வழங்க துவங்கியுள்ள நிலையில் 7 ஏர்பேக்குகள், ADAS சார்ந்த பாதுகாப்பு என பலவற்றை பெற்று மிகவும் நவீனத்துவமான இன்டீரியரை கொண்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் மற்றும் மிகவும் தாராளமான இடவசதி , பின் இருக்கை அமருபவர்களுக்கான நல்ல லெக்ரூம், ஹெட்ரூம் வழங்கப்பட்டு சொகுசு தன்மையில் சிறப்பாக இருக்கும் வகையில் கொடுத்துள்ளது.

மற்றபடி, காரின் டிரைவிங் அனுபவத்தை பொறுத்தவரை மிக சிறப்பான பவர் வெளியீட்டை டாப் 61Kwh பேட்டரி பேக் கொண்ட FWD மாடல் வெளிப்படுத்தும் நிலையில், இதன் பயண அனுபவம் மற்றும் ரேஞ்ச் நிகழ்நேரத்தில் 400 முதல் 430 கிமீ வரை வழங்கலாம், ஆனால் இந்நிறுவனம் 500 கிமீக்கு கூடுதலாக கிடைக்கலாம் என சான்றிதழ் பெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக மாருதி சுசூகி நிறுவன முதல் எலெகட்ரிக் காரான இ விட்டாரா மிக வலுவான போட்டியாளர்களை இந்திய சந்தையில் எதிர்கொண்டாலும் வலுவான மாருதி சர்வீஸ் நெட்வொர்க் மிகப்பெரிய பலமாக இருக்க வாய்ப்புள்ளது. விலை அனேகமாக ரூ.17 லட்சம் முதல் துவங்க வாய்ப்புள்ளது.





