Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

100 கிமீ ரேஞ்சு வழங்கும் புதிய விடா VX2 Go 3.4kwh வேரியண்ட் அறிமுகமானது

by ராஜா
11 November 2025, 7:58 am
in Bike News
0
ShareTweetSend

vida vx2 go 3.4 kwh

ஹீரோ நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரசத்தி VX2 வரிசையில் உள்ள GO வேரியண்டிற்கு கூடுதலாக 3.4 kWh பேட்டரியுள்ள மாடல் விலை ரூ. 1.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல், முன்னர் அறிமுகமான VX2 2.2 kWh வேரியண்டடை விட அதிக ரேஞ்ச் பெற்று அதே அம்சங்களுடன் வருகிறது.

இந்த மின்சார ஸ்கூட்டர் 3.4 kWh நீக்கும் வகையிலான பேட்டரியுடன், முழு சார்ஜில் சுமார் 100 கிலோமீட்டர் வரை உண்மையான பயணம் செய்யும் திறனை வழங்குகிறது. இரு தனித்தனி பேட்டரி மாட்யூல்கள் வீட்டிலேயே சார்ஜ் செய்யலாம் என்பது இதன் முக்கிய சிறப்பாகும்.

2.2 kWh ஒற்றை பேட்டரி கொண்ட மாடல் உண்மையான ரேஞ்ச் 64 கிமீ ஆக உள்ளது. முன்பாக கிடைக்கின்ற மாடலை போலவே பவர் வெளிப்படுத்தும் இந்த டாப் வேரியண்டில் 6 kW பவரை வெளிப்படுத்தும் மின்மோட்டார் மற்றும் 26 Nm டார்க் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ வரை செல்லும் திறன் பெற்றுள்ளது. VX2 Go மாடலில் “Eco” மற்றும் “Ride” எனும் இரண்டு பயண முறைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இதன் முக்கியமான மற்றொரு அம்சமாக Battery-as-a-Service (BaaS) திட்டத்திலும் இதன் மூலம் பயனர்கள் பேட்டரியை நேரடியாக வாங்காமல், மாதாந்திர பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணத்தை செலுத்த முடியும். இது விலையை குறைத்து, அதிகமான பயனர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

BAAS திட்டத்தில் வாங்குவோர் ரூ.60.000 செலுத்தினால் போதும், அதேவேளையில் ஒவ்வொரு கிமீ பயணத்துக்கும் ரூபாய் 0.90 பைசா வசூலிக்கப்பட உள்ளது.

குடும்ப பயண்பாடுகளுக்கு ஏற்ற டிசைன், வசதியான இருக்கை, மேம்பட்ட டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்களுடன் வருகிறது. மொத்தத்தில், ஹீரோவின் இந்த புதிய மாடல், 27 லிட்டர் இருக்கை அடியிலான ஸ்டோரேஜ் வசதி கொண்டிருக்கின்றது.

  • VX2 Go – ₹ 85,000
  • VX2 Go 3.4kwh – ₹ 1,02,000
  • VX2 Plus 3.4kwh – ₹ 1,10,000

(எக்ஸ்-ஷோரூம் விலை)

 

Related Motor News

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

விடா எலக்ட்ரிக் உரிமையாளர்களுக்கு வாரண்டி மற்றும் சிறப்பு சலுகைகள்

12.5 கோடி இரு சக்கர வாகனங்களை விற்ற ஹீரோ மோட்டோகார்ப்

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் யார் ?

Tags: Hero Vida VX2Hero Vida VX2 Go
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hero hunk 440sx scrambler

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

hero xpulse 210 dakar edition

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

எலக்ட்ரிக் பிரிவில் டிவிஎஸ் e.FX.30, M1-S மற்றும் X அறிமுகம்

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம்

தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ்

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

குழந்தைகளுக்கான ஹீரோ விடா Dirt.e K3 ஆஃப்-ரோடு பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

எதிர்காலத்திற்கான ஹீரோ விடா Novus சீரிஸ் கான்செப்ட் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan