
யமஹா இந்தியாவின் பிரசத்தி பெற்ற FZ வரிசையில் மற்றொரு மாடலாக 150cc என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள FZ Rave மிகவும் ஸ்போர்ட்டிவான வடிவமைப்புடன் ஒற்றை இருக்கையுடன் ரூ.1,17 லட்சத்தில் வெளியாகியிருக்கின்றது.
மேட் டைட்டன் மற்றும் மேட் பிளாக் என இரு நிறங்களை பெற்று மிகவும் நம்பகமான 149cc ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 12.4hp மற்றும் 13.3Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
இருபக்கத்திலும் 17 அங்குல வீல் பெற்று FZ ரேவ் மாடலில் 13 லிட்டர் எரிபொருள் கலன், 790மிமீ இருக்கை உயரம் மற்றும் 165மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸூடன் இரு பக்கத்திலும் டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆனது வழங்கப்பட்டுள்ளது.
பயணத்தின் போது வசதியாகவும் , நீண்ட தொலைவு பயணத்தின் போது இருக்கை மிக சிறப்பான சொகுசினை வழங்க ஏதுவாக ஒற்றை இருக்கை அமைப்பு வழங்கப்பட்டு, சிறிய எல்சிடி கிளஸ்ட்டர் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.
மற்றபடி, பெரும்பாலான மெக்கானிக்கல் பாகங்கள் தற்பொழுதுள்ள FZ பைக்குகளிலும் இருந்து பெற்றாலும், புதிய புராஜெக்டர் எல்இடி விளக்கு மற்றும் எல்இடி டெயில் லைட் வேறுபட்டதாக அமைந்துள்ளது. இந்த மாடல் 150-160சிசி சந்தையில் உள்ள பல்வேறு போட்டியாளர்களை எதிர்கொள்ள உள்ளது.


