
150cc FZ வரிசையில் யமஹா மோட்டாரின் 9வது மாடலாக புதிய FZ ரேவ் பைக் மிகவும் அக்ரோஷமான தோற்றத்தை பெற்ற மாடலின் மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள், ஆன்-ரோடு விலை மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
Yamaha FZ Rave
பிரசத்தி பெற்ற FZ வரிசையில் வந்துள்ள மற்றொரு மாடலான ரேவ் ஏற்கனவே உள்ள மிக சிறப்பான தரம், மைலேஜ் என நிருபிக்கப்பட்ட 149cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு, அதிகபட்சமாக 7,250rpm-ல் 12.4hp மற்றும் 5,500rpm-ல் 13.3Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
டைமண்ட் வகை சேஸிஸ் கொண்ட இந்த மாடலில் முழுமையான புரஜெக்டர் எல்இடி விளக்கு வழங்கப்பட்டு, சிறிய எல்சிடி கிளஸ்ட்டரை பெற்றுள்ளது.
FZ Rave – ₹ 1,17,896
(Ex-showroom TamilNadu)
Yamaha FZ Rave on road Price in Tamil Nadu
2025 யமஹா எஃப்இசட் ரேவ் பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, ஓசூர், புதுக்கோட்டை, தருமபுரி, நாகர்கோவில் என மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடும்.
- FZ Rave All colours – ₹ 1,41,654
(All Prices on-road Tamil Nadu)
- FZ Rave All colours – ₹ 1,29,954
(All Prices on-road Pondicherry)
புதிய FZ Rave பைக்கின் பரிமாணங்களில் 1,990 மிமீ நீளம், 780 மிமீ அகலம் மற்றும் 1,080 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,330 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 795 மிமீ மற்றும் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டு பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று 17 அங்குல வீலுடன் முன்பக்கத்தில் 100/80-17M/C 52P மற்றும் பின்புறத்தில் 140/60R17M/C 63P ரேடியல் டயருடன் இருபக்க டயர்களிலும் 282 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 240மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாக சிங்கிள் சேனல் அன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுள்ளது.
சிறிய எல்சிடி கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு ஒற்றை இருக்கையுடன் புராஜெக்டர் எல்இடி விளக்கு மற்றும் எல்இடி டெயில் லைட் வேறுபட்டதாக அமைந்துள்ளது.

யமஹா எஃப்இசட் ரேவ் 150 நுட்பவிபரங்கள்
| என்ஜின் | |
| வகை | ஏர் ஆயில் கூல்டு, 4 stroke |
| Bore & Stroke | 57.3 mm x 57.9 mm |
| Displacement (cc) | 149 cc |
| Compression ratio | 9.6 : 1 |
| அதிகபட்ச பவர் | 9.1 kW (12.4PS) at 7,250 rpm |
| அதிகபட்ச டார்க் |
13.3 Nm at 5,500 rpm
|
| எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
| டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
| ஃபிரேம் | டைமண்ட் ஃபிரேம் |
| டிரான்ஸ்மிஷன் | 5 ஸ்பீடு |
| கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
| சஸ்பென்ஷன் | |
| முன்பக்கம் | டெலிஸ்கோபிக் ஃபோர்க் |
| பின்பக்கம் | மோனோ ஷாக் அப்சார்பர் |
| பிரேக் | |
| முன்புறம் | டிஸ்க் 282 mm (ABS) |
| பின்புறம் | டிஸ்க் 240 mm |
| வீல் & டயர் | |
| சக்கர வகை | அலாய் |
| முன்புற டயர் | 100/80-17M/C 52P ட்யூப்லெஸ் |
| பின்புற டயர் | 140/60R – 17M/C 63P ட்யூப்லெஸ் |
| எலக்ட்ரிக்கல் | |
| பேட்டரி | 12V 4.0Ah MF |
| ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
| பரிமாணங்கள் | |
| நீளம் | 1990 mm |
| அகலம் | 780 mm |
| உயரம் | 1080 mm |
| வீல்பேஸ் | 1330 mm |
| இருக்கை உயரம் | 790 mm |
| கிரவுண்ட் கிளியரண்ஸ் | 165 mm |
| எரிபொருள் கொள்ளளவு | 13 litres |
| எடை (Kerb) | 136 kg |
யமஹாவின் எஃப்இசட் ரேவ் நிறங்கள்
இந்த புதிய ரேவில் மேட் டைட்டன் மற்றும் மேட் பிளாக் என இரு நிறங்களை பெற்றுள்ளது.
2025 Yamaha FZ Rave Rivals
இந்திய சந்தையில் 150cc எஞ்சின் பிரிவில் உள்ள ஹைபிரிட் ஒரே மாடலாக உள்ளதால், இதற்கு போட்டியாக பல்சர் 150, யூனிகார்ன் 160 உட்பட மற்ற 150-160 பைக்குகளையும் எதிர்கொள்ளுகின்றது.
Faqs About FZ Rave
2025 யமஹா FZ ரேவ் பைக்கின் ஆன்-ரோடு விலை பட்டியல் ?
2026 யமஹா FZ ரேவ் ஆன்ரோடு விலை ரூ. 1.41 வரை அமைந்துள்ளது.
யமஹாவின் FZ Rave எஞ்சின் விபரம் .?
மற்ற FZ போல இதிலும் 149cc ஒற்றை சிலிண்டர் பெற்று அதிகபட்சமாக 12.4hp மற்றும் 13.3Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
Yamaha FZ Rave ஹைபிரிட் பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?
யமஹா FZ ரேவ் பைக்கின் மைலேஜ் 50-52 கிமீ வழங்குகின்றது.
Yamaha FZ rave Gallery






