உலகளவில் முதன்முறையாக மின்சார வாகனங்களுக்கான பிரசத்தி பெற்ற ஃபார்முலா E பந்தயங்களின் டிசைனை தழுவியதாக புதிய மஹிந்திரா BE 6 ஃபார்முலா இ சிறப்பு எடிசனின் ஆரம்ப விலை ரூ.23.69 லட்சம் முதல் ரூ.24.49 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஓராண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட BE 6, XEV 9e என இரு மாடல்களும் 30,000க்கு மேற்பட்ட விற்பனை எண்ணிக்கையை 7 மாதங்களில் பதிவு செய்து சுமார் 8,000 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது.
Mahindra BE 6 Formula E
வழக்கமான மாடலை விட மாறுபட்ட புதுப்பிக்கப்பட்ட முன்புற பம்பர், கிளாஸ் பிளாக் பெசல் ஃபினிஷ் மற்றும் ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்சு ஹைலைட்டுகள். ரேஸ் டிராக்கால் ஈர்க்கப்பட்ட 20 அங்குல அலாய் வீல்கள் , ஆரஞ்சு நிற பிரேக் காலிப்பர்கள் மற்றும் விண்ட்ஷீல்டில் “Mahindra Formula E” செராமிக் பெயின்ட் பிராண்டிங் ஆகியவை கவனிக்கதக்க முக்கிய அம்சங்களாகும்.
இன்டீரியரில் ஃபயர்ஸ்டோர்ம் ஆரஞ்சு நிறத்தை தழுவிய இருக்கைகள் மற்றும் டாஷ்போர்டில் ஃபார்முலா இ லோகோ , ரேஸ் கார் பாணியிலான ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் ஃப்ளாப் மற்றும் ஃபார்முலா இ வால் ஈர்க்கப்பட்ட கஸ்டம் ஸ்டார்ட்அப் அனிமேஷன் ஆகியவை ரேஸ் அனுபவத்தை மேலும் அதிகரிக்கின்றது.
முதலில் வாங்கும் 999 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பலன்கள்
- ஸ்பெஷல் Formula E Merchandise MSPT Track Day
- காரின் உள்ளே உங்கள் பெயர் + Special number decal
- Mahindra Racing HQ பார்வையிட அனுமதி
- 3 பேருக்கு Formula E Prix லண்டன் போட்டிகளில் பங்கேற்கலாம்
- VIP அனுமதியுடன் மஹிந்திரா ரேஸ் குழுவை சந்திக்கலாம்
முக்கிய தேதிகள்:
- பிடித்த மாடலைத் தேர்வு செய்யும் நாள்: 14 டிசம்பர்
- புக்கிங் open: 14 ஜனவரி 2026
- டெலிவரி தொடக்கம்: 14 பிப்ரவரி 2026
79Kwh பேட்டரி பேக் கொண்டுள்ள பிஇ 6 வேரியண்ட் பவர் 286hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 656 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது. சார்ஜர் மற்றும் பொருத்துதல் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். 7.2 kW சார்ஜருக்கு ₹50,000 கூடுதலாகவும் அல்லது 11.2 kW சார்ஜருக்கு ₹75,000 ஆகும்.

